சூப்பரான வெங்காய சமோசா செய்வது எப்படி?





சூப்பரான வெங்காய சமோசா செய்வது எப்படி?

வெங்காயத்தில் பல்வேறு கந்தக கலவைகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கின்றன. க்வெர்செடின், ஃபிளாவனாய்டுகள் மற்றும் அல்லிசின் போன்ற சேர்மங்கள் புற்று நோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன, 
சூப்பரான வெங்காய சமோசா செய்வது எப்படி?
அவை உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பச்சை வெங்காயத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. 
வெங்காயத்தில் குர்செடின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. 

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. ஆர்கானிக் கந்தகம் இருப்பதால் வெங்காயத்தின் வாசனை சற்று வலுவாக இருக்கும். 

ஆனால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் வெங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது. இதன் விளைவாக, இதய நோய் மற்றும் மாரடைப்பு அபாயமும் குறைகிறது.

வெங்காயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், மாங்கனீஸ், தாமிரம் நிறைந்துள்ளது. இந்த கூறுகள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் முக்கியம். 

வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் நரம்பு சம்பந்தமான நோய்கள் வரும் அபாயம் குறைகிறது.
தேவையான பொருள்கள் :

மைதா - 3 கப்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 1 கப்

உள்ளே வைப்பதற்கு.

வெங்காயம் - 2 கப் (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)

மிளகாய் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்

மல்லி தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1/2 கப்
செய்முறை:
வெங்காய சமோசா
முதலில் ஒரு பௌலில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக பிசைந்து, ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, 

மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, இறக்க வேண்டும்.
அடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, பின் பூரி போன்று வட்டமாக தேய்த்து, இரண்டாக வெட்டி, ஒரு பாதியில் வதக்கி வைத்துள்ள கலவையை சிறிது வைத்து, சமோசா வடிவில் செய்து, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சமோசாக் களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான வெங்காய சமோசா ரெடி!
Tags: