சுவையான ஸ்டஃப்டு மிர்ச்சி சமோசா செய்வது எப்படி?





சுவையான ஸ்டஃப்டு மிர்ச்சி சமோசா செய்வது எப்படி?

சிவப்பு மற்றும் மஞ்சள் போன்ற பல கலர்களில் கிடைக்கும் குடை மிளகாய்கள், பெல் பெப்பர்ஸ் மற்றும் ஸ்வீட் பெப்பர்ஸ் என்றும் குறிப்பிடப் படுகின்றன. 
சுவையான ஸ்டஃப்டு மிர்ச்சி சமோசா செய்வது எப்படி?
பல்வேறு நிறங்களில் கிடைப்பது போலவே பலவித ஆரோக்கிய நன்மைகளையும் குடை மிளகாய்கள் கொண்டுள்ளன. பல்வேறு பிரபலமான உணவுகளில் சுவையூட்ட, குடை மிளகாய்கள் சேர்க்கபப்டுகின்றன. 

உணவை கலர்ஃபுல்லாக மாற்றவும் உதவுகின்றது. இந்த சிவப்பு மற்றும் மஞ்சள் நிற பெல் பெப்பர்ஸ் பலருக்கும் தெரியாத சிறந்த ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. 
இவற்றை பச்சையாகவும் சாப்பிடலாம், சமைத்தும் சாப்பிடலாம். குடை மிளகாய்களில் நம் கண்களை பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் கரோட்டினாய்டுகளான Lutein மற்றும் zeaxanthin-கள் உள்ளன. 

எனவே குடை மிளகாய்களை உணவில் சேர்ப்பது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.ஃபிளாவனாய்ட்ஸ் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் குடை மிளகாய்களில் நிறைந்துள்ளன. 

இது உடலை ஆக்ஸிடேட்டிவ் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. குடை மிளகாய்களின் ரிச்சான சிவப்பு கலருக்கு Capsanthin தான் காரணம். Capsanthin என்பது ஒரு சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். 

இது UVA மற்றும் UVB சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.குடை மிளகாய்களில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட பல அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. 

இந்த வைட்டமின்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், நோய் அபாயத்தைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

குழந்தைகளுக்கு பிடித்த தால் அல்வா செய்வது எப்படி?

தேவையான பொருள்கள் :

பஜ்ஜி மிளகாய் (குடை மிளகாய்)- 4

எண்ணெய் - தேவைக்கு

ஸ்டஃப் செய்ய:

உருளை - 2

வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - ஒன்று

சாம்பார் பொடி - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

கரம் மசாலா - சிறிது

உப்பு

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

கடுகு, சீரகம் - தாளிக்க
கறிவேப்பிலை, கொத்தமல்லி

எலுமிச்சை - பாதி

மேல் மாவுக்கு:

மைதா - அரை கப்

ரவை - அரை தேக்கரண்டி

சூடான எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு

செய்முறை :
ஸ்டஃப்டு மிர்சி சமோசா
உருளையை வேக வைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும். இதில் வேக வைத்த உருளை, கொத்த மல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுக்கவும். எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து விடவும்.

மிளகாயின் ஒரு பக்கத்தில் மட்டும் கத்தியால் கோடு போட்டு உள்ளே இருக்கும் விதையை முடிந்தவரை நீக்கவும். பின் உருளை கலவையை வைத்து ஸ்டஃப் செய்யவும். 
மேலே எண்ணெய் ஆனால் டிஷூ பேப்பர் கொண்டு துடைத்து வைக்கவும். மேல் மாவுக்கு தேவையானவற்றை கலந்து பூரி மாவு பதத்தில் பிசையவும். இதை மெல்லியதாக திரட்டி ஒரு இன்ச் அளவு அகலம் உள்ள ரிப்பன்களாக வெட்டி வைக்கவும்.

மிளகாயின் காம்பு பகுதியில் கழுத்தை சுற்றி துண்டு போடுவது போல் மைதா மாவு ரிப்பனை சுற்றி நீர் தடவி ஒட்டவும். மிளகாய் மேல் எண்ணெய் இருந்தால் மைதா ஒட்டாது.

ஒரு சுற்றின் மேல் சிறிது ஓவர்லேப் ஆவது போல் அடுத்த சுற்று இருக்க வேண்டும். அப்படி ஓவர்லேப் ஆகும் இடத்தில் நீர் தடவி ஒட்டி கொண்டே சுற்றி வைக்கவும். மிளகாய் எங்கும் வெளியே தெரியாமல் சுற்றவும். 
ஒரு ரிப்பன் முடிந்தால் அடுத்த ரிப்பனை நீர் தடவி ஒட்டி தொடரவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இவற்றை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான ஸ்பைஸி ஸ்டஃப்டு மிர்சி சமோசா தயார். 

மிளகாய் காரமாக இருக்கும் என்பதால் உள்ளே வைக்கும் ஸ்டஃபிங் அதிக காரம் இல்லாமல் பார்த்து சேர்க்கவும். விரும்பினால் பீன்ஸ், கேரட், பட்டாணி எல்லாம் கலந்து செய்யலாம்.
Tags: