மைக்ரோவேவ் பால்கோவா செய்முறை / Microwave Palkova !





மைக்ரோவேவ் பால்கோவா செய்முறை / Microwave Palkova !

தேவையான பொருள்கள் :

கன்டண்ஸ்டு மில்க் - ஒரு டின்

தயிர் - ஒரு மேசைக்கரண்டி

நெய் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:
மைக்ரோவேவ் பால்கோவா
தேவையான வற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். ஒரு கண்ணாடி பவுலில் ஒரு தேக்கரண்டி அளவு நெய் தடவி கன்டண்ஸ்டு மில்க் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.

அதை மைக்ரோவேவ் ஹையில் வைத்து 2 நிமிடங்கள் சூடாக்கவும்.

பிறகு வெளியே எடுத்து கரண்டியால் கலந்து விட்டு, மேலும் 2 நிமிடங்கள் அவனில் வைக்கவும்.

நன்கு கொதித்து கலவை கெட்டியாகத் தொடங்கும் நிலையில் எடுத்து மீண்டும் ஒரு முறை கலந்து விட்டு 2 நிமிடங்கள் அவனில் வைக்கவும்.

கலவை நன்கு கெட்டியாகி கையில் ஒட்டாத பதம் வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரிமாறவும்.

எளிதில் செய்யக்கூடிய சுவையான பால்கோவா நிமிடங்களில் தயார்.
Tags: