அருமையான சாம்பார் வடை செய்வது எப்படி? #Vadai





அருமையான சாம்பார் வடை செய்வது எப்படி? #Vadai

நம் உடல் உறுப்புகளை புதுப்பித்து உளுந்து போகாமல், ஆற்றல் தருவதால் தா‌ன் இதற்கு உளுந்து என பெயர் வந்தது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தானிய வகைகளில் உளுந்து முக்கிய இடத்தில் உள்ளது. 
அருமையான சாம்பார் வடை செய்வது எப்படி?
உளுத்தம் பருப்பு அல்லது உளுந்து என்பது இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து தோன்றிய ஒரு வகை பயிராகும். இது நாடு முழுவதும் உள்ள இந்தியர்களால் பரவலாகப் பயிரிடப்படுகிறது. 

சுவை மட்டுமின்றி உளுத்தம் பருப்பில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. தென் இந்திய உணவுகளில் குறிப்பாக நம்ம ஊர் தோசை, இட்லி, மெது வடை போன்ற உணவுகளின் முக்கிய மூலப்பொருள் உளுந்து தான். 

உளுந்து ஏராளமான கனிமங்களையும், ஊட்டச் சத்துகளையும் கொண்டுள்ளது. உளுந்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. 
இந்த நார்ச்சத்துக்கள் நீங்கள் உண்ணும் உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் உங்கள் உடல் உறிஞ்ச உதவுகின்றன. 

மேலும் நார்ச்சத்தானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.
தேவையான பொருள்கள் :

வடை தயாரிக்க:

உளுத்தம் பருப்பு - 150 கிராம்

இஞ்சி - ஒரு மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - 2 (நடுத்தரமான அளவு)

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - இரண்டு ஆர்க்

இட்லி சோடா - ஒரு சிட்டிகை

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தலாமா? டிப்ஸ்!
சாம்பாருக்கு:

பருப்பு - வேக வைக்க

பருப்பு - 75 கிராம்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

தக்காளி - ஒன்று (பெரியது)

பூண்டு - இரண்டு பல்

வெள்ளை புளி - சிறிது .

தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 25 கிராம்

கறிவேப்பிலை - இரண்டு ஆர்க்

நெய் - ஒரு தேக்கரண்டி

சாம்பார் பொடி - ஒரு மேசைக்கரண்டி

வெள்ளை புளி - ஒரு கொட்டைப்பாக்களவு.

அலங்கரிக்க:

கொத்தமல்லி தழை - தேவையான அளவு

பொடியாக அரிந்த வெங்காயம் - இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை :

முதலில் வடைக்கு அரைக்க உளுந்தை ஒரு மணி நேரம் ஐஸ் வாட்டரில் ஊற வைத்து வடிக்கட்டியில் தண்ணீரை வடிகட்டி உப்பு, இட்லி சோடா சேர்த்து மையாக அரைத்து வைக்கவும்.

அதில் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சமிளகாய் மூன்றையும் பொடியாக அரிந்து கலந்து வைக்கவும். சாம்பார் தயாரிக்க: பருப்பை களைந்து குக்கரில் போட்டு சின்ன வெங்காயம் முழு தோலை எடுத்து போடவும்.

தக்காளியை இரண்டாக அரிந்து சேர்க்கவும். மேலும் மஞ்சள் தூள் மற்றும் சீரகம் சேர்த்து ஒன்றிற்கு இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்து அடுப்பில் ஏற்றவும்,
வெயிட் போட்டு தீயின் தனலை குறைத்து வைக்கவும். இரண்டு முன்று விசில் வந்ததும் இறக்கவும். குக்கர் ஆவி அடங்கியதும். மத்தால் (அ) கரண்டியால்(அ) பிளண்டரால் வெந்த பருப்பை நன்கு மசிக்க்வும்.
சாம்பார் வடை
அரை டம்ளர் தண்ணீரில் சாம்பார் பொடியை கரைத்து, கால் டம்ளர் சுடு வெந்நீரில் புளியை ஊற வைத்து கரைத்து வைக்கவும்.

கரைத்து வைத்திருப்பவைகள் இரண்டையும் பருப்பில் சேர்த்து கொதிக்க விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கடைசியாக நெய்யை விடவும்.

இப்போது அரைத்து வைத்துள்ள வடைமாவை வடைகளாக தட்டி சுட்டெடுத்து எண்ணெயை வடித்து ஒரு பெரிய வாயகன்ற பவுளில் வைக்கவும்.
தாளித்து வைத்து இருக்கும் சின்ன வெங்காய சாம்பாரை வடையின் மேல் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.

பத்து நிமிடம் கழித்து நன்கு வடையில் சாம்பார் ஊறி இருக்கும். தனியாக தேவைக்கு எடுத்து பரிமாறவும். சுவையான கம கம சாம்பார் வடை ரெடி.
Tags: