முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது.
முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது.
ஏன் கோடை காலத்தில் லெகிங்ஸ், ஜீன்ஸ் தவிர்க்க வேண்டும்?
நீரிழிவு நோயாளிகள், இதய நோயால் பாதிக்கப் பட்டவர்களாக இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு முட்டையே போதுமானது என பரிந்துரைக்கின்றனர். காரணம் முட்டை அதிக புரதச்சத்து நிறைந்தது.
குறிப்பாக அதன் மஞ்சள் கருவில் அதிக கொழுப்பு நிறைந்துள்ளது. அதாவது ஒரு முட்டையில் 200 மில்லி கிராம் கொழுப்பு உள்ளதாம். ஆனால் மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 300 மில்லிகிராம் கொழுப்பே போதுமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தேவையான பொருள்கள் :
சேமியா பாக்கெட் - ஒன்று
முட்டை - ஒன்று
பொடியாக நறுக்கிய தக்காளி - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் - கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
சிக்கன் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை, கொத்த மல்லித் தழை - ஒரு கொத்து
தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி
சில்லி சாஸ் - அரை தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய் - தலா ஒன்று
ஆரோக்கியம் தரும் வெள்ளை அரிசி !
செய்முறை :
வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி வைக்கவும்.
மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து பொடிமாஸ் செய்து கொள்ளவும்.
வேறொரு பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயை விட்டு காய்ந்ததும், பட்டை, ஏலக்காய் மற்றும் சோம்பு தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து சேமியா மற்றும் காய்கறிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதகக்வும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு காய்கறிக் கலவை மற்றும் சிக்கன் மசாலா தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு காய்கறிக் கலவை மற்றும் சிக்கன் மசாலா தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும்.
கொதி வரும் போது தக்காலி சாஸ் மற்றும் சில்லி சாஸ் சேர்க்கவும். கலவை சற்று கெட்டியாகத் துவங்கியதும் சேமியாவைச் சேர்த்து மூடி போட்டு, குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
10 நிமிடங்கள் கழித்து திறந்தால், சேமியா வெந்து தண்ணீர் முழுவதும் வற்றி இருக்கும். அத்துடன் பொடிமாஸ் செய்து வைத்துள்ள முட்டையைச் சேர்த்து மெதுவாகக் கிளறி விட்டு இறக்கவும்.
சுவையான எக் வெஜ் மசாலா சேமியா ரெடி.