பாசுமதி அரிசி மற்ற அரிசிகளை விட லேசானதாக இருக்கும். ஸ்டார்ச்சின் அளவும் இதில் குறைவு என்பதால் மிக எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது.
அதனால் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் பத்தியத்தில் இருக்கும் போதும் கூட பாசுமதி அரிசியை எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகிறது.
இந்த பாசுமதி அரிசியை எடுத்துக் கொள்ளும் போது உடலில் ஜீரண ஆற்றல் மேம்பட்டு. எளிதில் உடல் கழிவுகள் வெளியேற்றப்படும்.
வாத, பித்த, கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் உடலில் அதிகரிக்கச் செய்யாமல் சமநிலையில் வைத்துக் கொள்வதற்கு பாசுமதி அரிசி உதவி செய்கிறது.
அதனால் வாத, பித்த. கபம் இவற்றில் எது அதிகமாக இருந்தாலும் அவர்கள் தங்கள் உணவில் பாசுமதி அரிசியைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய்தான். வெங்காயம் உரிக்கும் போது, நம்முடைய நமக்கு கண்ணீர் வருவதற்கு காரணமும் இந்த எண்ணெய் தான்.
உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்றக்கூடியது இந்த சின்ன வெங்காயம். ருசிக்காக மட்டுமல்லாமல், உடல் உபாதைகளுக்கும் இந்த சின்ன வெங்காயத்தை மருந்தாக பயன்படுத்தலாம்.
காலை, மதியம், மாலை, இரவு என்று 4 வேளைக்கு அரை ஸ்பூன் சின்ன வெங்காய சாறு சாப்பிட்டு வந்தால், நம்முடைய நுரையீரல் பலப்படுமாம்.
நுரையீரலில் தங்கியிருக்கும் அழுக்குகள், கழிவுகள், நச்சுக்கள் வெளியேறி விடும். ஜலதோஷம், இருமல், காய்ச்சல், நெஞ்சுசளி வந்தாலும், வெங்காய சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கிறது.
தேவையான பொருள்கள் :
பாசுமதி அரிசி : 1 கப்
முட்டை கோஸ் : 1/4 கிலோ (பொடியதாக நீள வாக்கில் நறுக்கவும்)
கேரட் : 1 (பொடியதாக நறுக்கவும்)
வெங்காயத் தாள்: 5 (பொடியதாக நறுக்கவும்)
கொடைமிளகாய் : 1 (சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்)
வெங்காயம்: 1 சிறியது ( நீளவாக்கில் நறுக்கியது)
பீன்ஸ் : 10 (பொடியதாக நறுக்கியது)
மிளகு தூள்: சிறிதளவு
சோயா சாஸ் : 2 தே. கரண்டி
அஜினமோட்டோ: 1 1/2 தே. கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணை 1/4 கப்
முட்டை : 2
செய்முறை :
பாசுமதி அரிசியை நன்கு களைந்து ஒரு தே. கரண்டி எண்ணையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். வெந்த பின் வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற விடவும்.
உதிரி உதிரியாக இருக்க வேண்டும். முக்கால் பாகம் வெந்தால் போதும். முட்டையில் 2 தே.கரண்டி எண்ணை, உப்பு, மிளகு தூள் சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும்.
கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணை விட்டு வெங்காயம், முட்டைகோஸ், கேரட், வெங்காயத் தாள், குடை மிளகாய், பீன்ஸ் ஆகிய வற்றை போட்டு வதக்கி மூடி வைக்கவும். (தண்ணீர் விடக் கூடாது).
சிறிது நேரத்திற்கு பின் சோயா சாஸ், அஜினமோட்டோ, உப்பு இவற்றை சேர்த்து கிளறி உடன் சாதத்தையும் போட்டு கிளற மூடி வைக்கவும்.
சிறிது நேரத்திற்கு பின் பொரித்த முட்டையை போட்டு கிளரி விடவும். சுவையான வெஜிடபில் ப்ரைட் ரைஸ் ரெடி.