மட்டன் சாப்பிடுவதால், நம்முடைய பார்வை கோளாறுகள் நீங்குவதுடன், கூர்மையான பார்வைகளுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். ஆடு இயற்கையாக உடலுக்கு குளிர்ச்சி வழங்கும் உணவை சேர்ந்தது.
அந்த வகையில், ஆட்டின் தலைக்கறியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலி தீரும். இதய கோளாறுகளை நீக்குவதில் தலைக்கறிக்கு முக்கிய இடம் உண்டு என்கிறார்கள்.
இந்த தலைக்கறியை அளவோடு சாப்பிட்டால் இதயநோய் தீரும் என்கிறார்கள். குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறியை வீட்டில் பெரியவர்கள் அடிக்கடி செய்து தருவார்கள்.
இது அவர்களின் இடுப்பு வலிக்கு நிவாரணமாக அமைகிறது. பால் சுரப்பும் அதிகமாக இருக்கும். பிறந்த குழந்தைக்கும் தலை சீக்கிரமாக நிற்க வேண்டுமென்று, இந்த ஆட்டுத் தலைக்கறியை குழம்பு செய்து தருவார்கள்.
தேவையான பொருள்கள்:
மட்டன் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 10 பல்
தேங்காய் துருவல் - ஒரு கப்
பொட்டுக்கடலை - அரை கப்
சோம்பு - ஒரு ஸ்பூன்
கசகசா - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
மல்லி தூள் - கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க :
எண்ணெய் - ஒரு குழி கரண்டி
பட்டை - 4 துண்டு
கிராம்பு - 6
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை :
மட்டன் பொடிமாஸ் செய்ய தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். கறியை நன்கு கழுவிவிட்டு குக்கரில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
வாணலியை சூடாக்கி அதில் சோம்பு போட்டு சிவந்ததும் அத்துடன் பொட்டுக்கடலை, கசகசா சேர்த்து லேசாக வதக்கி இதை மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி வைக்கவும்
வெந்த கறியை மிக்ஸியில் போட்டு லேசாக ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். உதிர்த்த கறியில் பொட்டுக்கடலை பொடி, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
அந்த கலவையில் சிறிதளவு தண்ணீர் தெளித்து ஒன்றாக பிசையவும். வாணலியை சூடாக்கி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு வெடித்ததும் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதில் பொடிமாஸ் கலவையை சேர்த்து நன்கு வதக்கி சிவந்து முறுவலாகும் வரை வைத்து இறக்கவும். சுவையான மட்டன் பொடிமாஸ் தயார். இந்த பொடிமாஸில் எலுமிச்சைச் சாறு பிழிந்து சாப்பிட சுவைக்கூடும்.