சுவையான தக்காளி இனிப்பு பச்சடி செய்வது எப்படி?





சுவையான தக்காளி இனிப்பு பச்சடி செய்வது எப்படி?

16 ஆம் நூற்றாண்டில் போர்த்து கீசியர்களால் அறிமுகப் படுத்தப்பட்ட போதிலும், மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் தங்கள் இந்தியப் பேரரசின் அடித்தளத்தை அமைக்கத் தொடங்கிய போது,​​இந்தியாவில் தக்காளி கிட்டத்தட்ட அறியப்படவில்லை. 
சுவையான தக்காளி இனிப்பு பச்சடி செய்வது எப்படி?
இது கெட்ட கொழுப்பை குறைத்து, இதயத்தை காக்கிறது. தக்காளியை தினமும் உண்பதால், நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். இது சர்க்கரை நோயால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. 

மேலும் சர்க்கரை நோயால் ஏற்படும் வீக்கம், திசு சேதம் ஆகியவற்றை போக்க தக்காளியை பச்சையாக சாப்பிடுவது நல்லது. ரத்தச் சிவப்பு நிறத்தில் உள்ள தக்காளியை ஸ்நாக்ஸ் போல பச்சையாகவே சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. 
காய்ச்சல் வந்தால் முதலுதவி செய்வது எப்படி?
சமையலில் அது கொடுக்கும் மனமும், புளிப்புச் சுவையும் அலாதியானது. அது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்துக்களும் தக்காளியில் நிரம்பியுள்ளன. தக்காளியில் விட்டமின் சி மற்றும் விட்டமின் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. 

அதே போல பொட்டாசியம் சத்தும் உள்ளது. விட்டமின் சி சத்தானது சரும ஆரோக்கியத்திற்கு உதவியாக அமைகிறது. 

விட்டமின் கே சத்தானது ரத்தத்தை உறைய வைப்பதற்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாகும். பொட்டாசியம் சத்தானது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

தக்காளியில் நிறைவான நீர்ச்சத்தும், குறைவான கலோரியும் இருப்பதால் உடல் எடையை குறைக்க இது உதவியாக அமையும். 

அது மட்டுமல்லாமல், தக்காளியில் உள்ள நார்ச்சத்து, வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் பசி கட்டுப்படுத்தப் படுகிறது.
சிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா?
தேவையான பொருள்கள் :

நன்கு பழுத்த தக்காளி - 3

சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

முந்திரிப் பருப்பு - சிறிது

காய்ந்த திராட்சை - சிறிது

ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை: 
சுவையான தக்காளி இனிப்பு பச்சடி செய்வது எப்படி?
ஒரு பாத்திரத்தில் 4 முதல் 5 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, தக்காளியை முழுதாகப் போட்டு மூடி வைத்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும்.

அடுப்பை அணைத்து விட்டு, தக்காளியை வெளியே எடுத்து ஆற விடவும். பின்னர் தோலை உரித்து விட்டு, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத் தெடுக்கவும்.
அரைத்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். 

பச்சடி கொதிக்க ஆரம்பித்து, சற்று கெட்டியானவுடன், அதில் முந்திரி, திராட்சை ஆகியவற்ற நெய்யில் வறுத்து சேத்து, ஏலக்காய் தூளையும் தூவி கிளறி இறக்கி வைக்கவும்.
Tags: