பொதுவாகவே சூப் சாப்பிட்டால், நம்முடைய உடம்பில் உள்ள என்சைம்களை தூண்டுவதால், செரிமானம் சரிவர நடக்கும். அசிடிட்டியை குறைத்து, பசியை தூண்டும்.
ஒவ்வொரு வகையில் நமக்கு உபயோகப்படக் கூடியவையே. மொத்தம் 3 வகையான சூப்கள் இருக்கிறதாம். கால் எலும்புகளை வைத்து சூப் செய்து சாப்பிடுவது, ஆண்களுக்கு மிகவும் பலத்தை தருகிறது.
கலோரி கட்டுப்பாட்டை இந்த ஆட்டுக்கால் சூப் ஊக்குவிக்கிறது. பொதுவாக மூட்டுவலி முதுகுவலி மூட்டு தேய்மானம் போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளினால் அவதிப்படு பவர்களுக்கு இந்த ஆட்டுக்கால் சூப் மிகவும் நல்லது.
இருதய தசைகளையும் பலப்படுத்தும். இந்த சூப், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற கனிமங்களின் ஆதாரமாக விளங்குகிறது.
அத்துடன், கொலாஜன், ப்ரோளின், ஜெலட்டின், ஹியலுரோனிக் அமிலம் போன்றவையும் அதிகமாக உள்ளது.. கொலஸ்ட்ரால் அளவு மேம்படுகிறது.
இதய ஆரோக்கியம் அதிகரிக்கிறது. உடம்பில் உள்ள நச்சுகள் நீங்குகிறது.. ரத்த சர்க்கரை அளவு சீராகிறது. நீரிழிவு அபாயம் குறைக்கப் படுகிறது.
தேவையான பொருள்கள்:
ஆட்டுக்கால் - 10
வெங்காயம் - 4
தக்காளி - 3
இஞ்சி, பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
கொத்த மல்லித் தழை - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 3 + அரைக்க 2
தேங்காய் பால் - ஒரு கப்
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
முந்திரி - 10
கசகசா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - ஒன்று
பட்டை, லவங்கம், ஏலக்காய் - 4
எண்ணெய்
செய்முறை :
தேங்காய் துருவல், முந்திரி, கசகசா, 2 பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும். இரண்டு வெங்காயம் மற்றும் ஒரு தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
ஆட்டுக்காலை சுத்தம் செய்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், 2 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும்.
தாளித்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்.
அரைத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி கலவையை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். வதங்கிய பின்பு வேக வைத்துள்ள ஆட்டுக்கால் கலவை, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
நன்றாக கொதிக்கும் போது தேவையான அளவு தனி மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் தேங்காய் பால் சேர்க்கவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும். சுவையான ஆட்டுக்கால் பாயா கிரேவி தயார்.