பெரும்பாலும் நகர்ப்புறப் பகுதிகளில் வான்கோழி விற்கப் படுவதில்லை. புறநகர் பகுதிகளில் வான்கோழிகள் உயிருடன் விற்கப்படுகிறது. கோழிக் கடைகளிலேயே வான்கோழிகள் கிடைக்கும்.
அதை அவர்களே மஞ்சள் பூசி தீயில் வாட்டி முடிகளை நீக்கிப் பக்குவமாகத் தருவார்கள். கோழி இறைச்சியை விரும்பிச் சாப்பிடுபவர்கள் கூட வான்கோழியைச் சாப்பிடுவதற்கு சற்றுத் தயக்கம் காட்டுவார்கள்.
காரணம் வான் கோழி இறைச்சியின் வாடை சற்றுத் தூக்கலாக இருக்கும். அத்தோடு வான்கோழி இறைச்சி கோழி இறைச்சியை விட சற்று கெட்டியாக இருக்கும்.
வான்கோழியை பிரியாணியாக சமைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். தம் போட்டு வான்கோழி பிரியாணி செய்தால் வாசனை மூக்கைத் தூக்கும். கறியும் பஞ்சு பஞ்சாகப் போய்விடும்.
அதே போல் வான்கோழி குழம்பு செய்யும் போது அதை குக்கரில் வைத்து 5-8 விசில்கள் விட்டு பின்னர் அதை வெட்டித் துண்டுகளாக்கி குழம்பு வைத்தால் கறி மென்மையாக இருக்கும்.
கடைகளில் இருந்து துண்டுகளாக வெட்டி வாங்கி வந்தாலும் அவற்றை பிரஷர் குக்கர், பிரஷர் பேனில் 8 விசில்கள் வரை வேக வைத்து பின் குழம்புக்குப் பயன்படுத்துங்கள்.
வான்கோழி துண்டுகளை நன்றாக மஞ்சள் பூசி கழுவினால் கவுச்சி மணம் போய் விடும். மண்சட்டியில் வான்கோழி குழம்பு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.
கொப்புளங்கள் ஏற்படக காரணங்கள் என்ன?
தேவையான பொருள்கள் :
வான் கோழி - ஒரு கிலோ
வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - 150 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தயிர் - கால் கப்
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒன்றரைத் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கரம் மசாலா தூள் போட்டு, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும், உப்பு மற்றும் தூள் வகைகளைச் சேர்த்துக் கிளறவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும், உப்பு மற்றும் தூள் வகைகளைச் சேர்த்துக் கிளறவும்.
பிறகு தயிர் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும். நன்கு கிளறி விட்டு வான்கோழி துண்டுகளைச் சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு வெந்நீர் ஊற்றி வேக வைக்கவும்.
40 நிமிடங்கள் கழித்து வெந்ததை சரிபார்த்து மல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான வான்கோழி குழம்பு தயார்.