நாம் எல்லோருக்கும் பரிச்சயமான முருங்கை மரமானது கீரைகளின் அரசன், கீரைகளின் முதல்வன், அதிசய மரம், வாழ்க்கை மரம், பிரம்மவிருட்சம் போன்ற பெயர்களில் அழைக்கப் படுகிறது.
இது காலம் காலமாக மருத்துவ குணத்திற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. முருங்கைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் இரத்தத்தின் குளுக்கோஸ் அளவு கட்டுக்குள் இருப்பதுடன், உடலை சீராக பராமரிக்க பல்வேறு வகையி்ல் உதவும் என்கின்றனர் மருத்துவர்கள்.
முருங்கை இலைகளை உணவில் அன்றாடம் சேர்த்துக் கொண்டால், அதிலிருக்கம் குளோரோ ஜெனிக் அமிலம் போன்ற ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
உடலில் வயதானால் ஏற்படும் மூட்டு வலிகளுக்கு இயற்கை முறையில் தீர்வு கான, முருங்கையை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். முருங்கை இலையில் உள்ள Anti-Inflammatory அதற்கு பெரிதும் உதவுகின்றது.
டயாபடீஸ் என்னும் நீரழிவு நோய் உடைய நோயாளிகள், கட்டாயம் உணவில் முருங்கையை தினந்தோறும் சாப்பிட வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள், அதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படும் என்று காரணம் கூறுகின்றனர்.
நீரழிவு நோய் நோயாளிகள் மறவாமல் உணவில் முருங்கையை சேர்த்துக் கொள்ள முயல்வது நல்லது என்றும் பரிந்துரைக்கின்றனர்.
தேவையான பொருள்கள் :
நறுக்கிய முருங்கைக்காய் - 3
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி (பெரியது) - ஒன்று
பச்சை மிளகாய் - மூன்று
பூண்டு - 3 பற்கள்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த் தூள் - ஒன்றரைத் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
திக்கான தேங்காய்ப் பால் - அரை கப்
கடுகு, உளுந்து, சோம்பு - தலா அரைத் தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முருங்கைக் காயைச் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அத்துடன் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கி, தூள் வகைகளைச் சேர்த்துப் பிரட்டவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்க விட்டு,
பொரித்த முருங்கைக் காயைச் சேர்த்து மூடி வைத்து சிறு தீயில் 3 நிமிடங்கள் வேக விடவும். முருங்கைக்காய் வெந்ததும் தேங்காய்ப் பாலைச் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
சாக்லேட் ஃபட்ஜ் குக்கீஸ் ரெசிபி !
சுவையான முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு தயார்.சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.