சுவையான புளியோதரை செய்வது எப்படி?





சுவையான புளியோதரை செய்வது எப்படி?

முன்பெல்லாம் வயதானவர்களுக்குத் தான் மூட்டுவலி பிரச்னைகள் இருக்கும். ஆனால் இன்றைய வாழ்க்கைச் சூழல், உணவுப் பழக்கங்களால் எந்த பிரச்னையும் எத்தனை வயதில் வேண்டுமானாலும் வருகிறது. 
சுவையான புளியோதரை செய்வது எப்படி?
ஆனால் இந்த மூட்டுவலியைப் போக்கும் ஆற்றல் புளிக்கு உண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரியும். புளி எலும்புகள் தேய்மானத்தைக் குறைக்கும் தன்மையுடையது. 
அதனால், எலும்புகளின் தேய்வால் உண்டாகும் மூட்டுவலி விரைவிலேயே கட்டுக்குள் வரும். 100 கிராம் புளியில் ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுகிற இரும்புச்சத்து முழுமையும் கிடைக்கிறது.

அதே போல், ஜீரணக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு ஆற்றல், உடலின் ரத்த ஓட்டம் உள்ளிட்டவைகளை புளி சீராக்குகிறது. மேலும், உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. 

அதோடு உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளைக் கரைக்கும் சக்தியும் புளிக்கு உண்டு. கால்களில் உண்டாகும் நீர்த்தேக்கம், வீக்கம், கீழ்வாதம் போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
தேவையான பொருள்கள் :

அரிசி - மூன்று கோப்பை

பொடி தயாரிக்க:

காய்ந்த மிளகாய் - பத்து

தனியா - மூன்று தேக்கரண்டி

கடலைப்பருப்பு - மூன்று தேக்கரண்டி

வெந்தயம் - முக்கால் தேக்கரண்டி

மிளகு - அரை தேக்கரண்டி

எள்ளு - இரண்டு தேக்கரண்டி

பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஆறு எண்ணிக்கைகள்

உப்பு - ஒரு தேக்கரண்டி.

தென்னிந்தியாவின் எல்லோரா இந்த கழுகுமலை உருவான கதை !

புளிக்காய்ச்சல் தயாரிக்க:

புளி - ஆரஞ்சு பழமளவு

எண்ணெய் - அரைக்கோப்பை

கடுகு - ஒன்றரை தேக்கரண்டி

மஞ்சத்தூள் - ஒரு தேக்கரண்டி

கடலைப் பருப்பு - இரண்டு தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - நான்கு

வேர்க்கடலை - ஒரு கைப்பிடி

பெருங்காயம் - கால் தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு - நான்கு தேக்கரண்டி
செய்முறை :
சுவையான புளியோதரை செய்வது எப்படி?
முதலில் அரிசியை வேக வைத்து உதிர் உதிராக வடித்து ஆற வைக்கவும்.புளியை சுடுதண்ணீரில் ஊற விடவும். 

பொடிக்கு தேவையானப் பொருட்களை ஒரு தேக்கரண்டி எண்ணெயில் சிவக்க வறுத்து, கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஊறிய புளியில் இரண்டு கோப்பை நீரைச் சேர்த்து கெட்டியாகக் கரைத்து, அதில் உப்பையும், மஞ்சள் தூளையும் போட்டு கலக்கி வைக்கவும்.

சட்டியில் எண்ணெயைக் காய வைத்து கடுகைப் போடவும். அது பொரிந்தவுடன் முதலில் கடலைப் பருப்பை போடவும்.

பிறகு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையைப் போட்டு வறுக்கவும். அதன் பிறகு வேர்க்கடலை மற்றும் பெருங்காயத்தையும் சேர்த்து வறுக்கவும்.

பின்னர் அதில் கலக்கி வைத்துள்ள புளிக் கரைசலை ஊற்றி கலக்கி கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பித்த பிறகு பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கலக்கி, அடுப்பிலிருந்து இறக்கி விடவும். 
பிறகு ஆற வைத்துள்ள சோற்றுடன் புளிக் காய்ச்சலை சிறிது சிறிதாக சேர்த்து, தேவையானால் இரண்டு தேக்கரண்டி எண்ணெயையும் சேர்த்து நன்கு கிளறவும்.

இப்போது சுவையான புளியோதரை தயார். அவரவர் விருப்பத்திற் கேற்றார்போல் புளியை கூட்டிக் குறைத்து கொள்ளலாம்.
Tags: