உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் பெரும் பங்கு வகிக்கின்றது. அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன.
அதிலும் அசைவ உணவு பிரியர்கள்
என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது. ஆனால் சைவ உணவு பிரியர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான்.
அது போல் ஒரு வகை தான் கொண்டைக் கடலை. இது பலருக்கு மிகவும் விருப்பமான ஒரு உணவுப் பொருள்.
பொதுவாக இதனை வைத்து பூரி மற்றும் சப்பாத்திக்கு சன்னா செய்து சாப்பிடுவோம். ஆனால் இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந் துள்ளன.
கொண்டைக்கடலை சுண்டல்
கடலையை 6 8 மணி நேரம் ஊற வைத்து, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வேக
வைக்கவும். கடாய் எண்ணெயில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.
இத்துடன் பெருங்காயம் சேர்க்கவும். கறிவேப்பிலை, வெந்த கடலையையும் சேர்த்து
வதக்கவும். தேங்காய் துருவல் சேர்த்து, ஒரு முறை வதக்கி இறக்கினால் கொண்டைக் கடலை சுண்டல் தயார்.
பயன்கள்
கொண்டைக்கடலையில் பலவித ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. முடி, நகம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு புரோட்டீன் சத்து மிக முக்கியம்.
எனவே தினமும் 100 கிராம் கொண்டைக் கடலையினை உட்கொண்டு வரவது நல்லது. கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
100 கிராம் கொண்டைக் கடலையில் கிட்டத்தட்ட 19 கிராம் நார்சத்து நிறைந்துள்ளது. உடல் எடையினை குறைக்க நார்சத்து முக்கியம். தினமும் நார்சத்து உணவினை உண்டு வருபவர்களுக்கு மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.
கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
கொண்டைக் கடலையில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது. உங்கள் உணவுகளில் உள்ள கால்சியம் சத்தினை உரிய மெக்னீசியம் சாது மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது.
மேலும் உங்கள் எலும்பு மற்றும் பற்களின் வலிமையினை அதிகரிக்கின்றது. எனவே உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் தினமும் கொண்டைக் கடலையினை உட்கொண்டு வந்தால் நிறைய பயன் பெறலாம்.
கொண்டைக் கடலையில் நார்ச்சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இவற்றை நீங்கள் தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் ஜீரண உறுப்புகள் மற்றும் குடலின் ஆரோக்கியம் மேம்படும்.
இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதில் புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரோட், வைட்டமின்கள்,
இரும்புச் சத்து,
கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந் திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்சினை ஏற்படு வதையும், ரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும்.
இதை அடிக்கடி செய்து சாப்பிட்டால் மேலும் உடலின் ஆற்றலை அதிகரிக் கப்பதுடன் கொழுப்பும் குறையும். இந்த குழம்பு உடல் சோர்வை போக்கும் தன்மை கொண்டது.
Tags: