ருசியான பீட்சா ஊத்தப்பம் செய்வது எப்படி?





ருசியான பீட்சா ஊத்தப்பம் செய்வது எப்படி?

0
தமிழர்களின் உணவுக் கலாச்சாரத்திலும் தக்காளி மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. சாம்பார், புளிக் குழம்பு, சட்னி, கிரேவி, அசைவ சமையல் என்ற எது ஒன்றை எடுத்துக் கொண்டாலும் தக்காளியை தவிர்க்க இயலாது. 
பீட்சா ஊத்தப்பம்
ரத்தச் சிவப்பு நிறத்தில் உள்ள தக்காளியை ஸ்நாக்ஸ் போல பச்சையாகவே சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. சமையலில் அது கொடுக்கும் மனமும், புளிப்புச் சுவையும் அலாதியானது. 
அது மட்டுமல்லாமல் ஊட்டச்ச த்துக்களும் தக்காளியில் நிரம்பியுள்ளன. தக்காளியில் விட்டமின் சி மற்றும் விட்டமின் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. அதேபோல பொட்டாசியம் சத்தும் உள்ளது. 

விட்டமின் சி சத்தானது சரும ஆரோக்கியத்திற்கு உதவியாக அமைகிறது. விட்டமின் கே சத்தானது ரத்தத்தை உறைய வைப்பதற்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாகும். 

பொட்டாசியம் சத்தானது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. அமில எதிர்ப்புத் தன்மை கொண்ட நபர்களுக்கு தக்காளியை சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம். அமில எதுக்களிப்பு பிரச்சனை ஏற்படலாம்.

தேவையானவை :

வழக்கம் போல் தயார் செய்த தோசை மாவு ரெடியாக வைத்துக் கொள்ளவும்.

தக்காளி சாஸ் - 1 கப்,

துருவிய தக்காளி - 1/2 கப்,

உப்பு - தேவையான அளவு,

மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,

மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்,

நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,

ஃபிரெஷ் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்,

ஓரிகானோ - 2 டீஸ்பூன்,

தக்காளி ஃப்யூரி - சிறிது,

எண்ணெய் - தேவைக்கு.
மேலே தூவ...

பச்சை, மஞ்சள்,

சிவப்பு குடை மிளகாய் - 2 கப் (அனைத்தும் சேர்ந்தது),

துருவிய சீஸ் - 1 கப்,

பீட்சா சாஸ், சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :
பீட்சா டாப்பிங்கிற்கு, ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பூண்டைப் போட்டு வதக்கவும்.

பின் தக்காளி ஃப்யூரி, தக்காளி சாஸ், உப்பு, மிளகுத் தூள், மிளகாய் தூள், ஓரிகானோ, ஃபிரஷ் கிரீம் முதலியவை சேர்த்துக் கொதிக்க விட்டு வைத்துக் கொள்ளவும். 

மாவை தோசைக்கல்லின் மேல் கெட்டியாகப் பரத்தி அதன் மேல் பீட்சா சாஸ், காய்கறிகள், துருவிய சீஸ், சில்லி சாஸ் முதலியவை களை ஒன்றன் மேல் ஒன்றாகப் பரத்தி, மேலே ஒரு மூடி கொண்டு மூடி மெல்லிய தீயில் வைக்கவும். 

நன்றாக வெந்தவுடன் சுடச் சுடப் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)