நெத்திலி மீன் ரெட் கிரேவி செய்வது எப்படி?





நெத்திலி மீன் ரெட் கிரேவி செய்வது எப்படி?

நெத்திலி மீன் தொக்கு என்றாலே அனைவருக்கும் நாவை சப்பு கொட்ட வைக்கும்.
நெத்திலி மீன் ரெட் கிரேவி செய்வது எப்படி?
அதை நல்ல கிரிப்பாக திக் ரெடி கிரேவி போல் செய்தால் சுவை சொல்ல வார்த்தைகள் இல்லை, இதை செய்து பார்த்து உண்மை யான்னு வந்து சொல்லுங்கள்.
தேவையான பொருட்கள்

நெத்திலி மீன் - 300 கிராம்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்

ட்மெட்டோ பேஸ்ட் - அரை கப்

காஷ்மீரி ரெட் சில்லி பவுடர் - ஒரு தேக்கரண்டி

பச்ச மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது

கட்டியாக கரைத்த புளி - முன்று மேசைகரண்டி

உப்பு - தேவைக்கு
உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் பூனம் பாஜ்வா - வாய் பிளந்த ரசிகர்கள் !
தாளிக்க
எண்ணை - 3 மேசைகரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

இஞ்சி துருவியது - ஒரு தேக்கரண்டி

பூண்டு பொடியாக நறுக்கியது - ஒரு தேக்கரண்டி

சர்க்கரை - அரை தேக்கரண்டி

கருவேப்பிலை - சிறிது

கொத்துமல்லி தழை - சிறிது
செய்முறை 
நெத்திலி மீன் ரெட் கிரேவி செய்வது எப்படி?
நெத்திலி மீனை கிழே சொல்லி உள்ளபடி கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும். தாளிக்க கொடுத்துள்ள வைகளை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய உடன் தக்காளி பேஸ்ட், மிளகாய்தூள், உப்பு தூள், சர்க்கரை, பச்ச மிளகாய் சேர்த்து நன்குகூட்டு பதத்துக்கு வதகக்கவும். 

கடைசியாக நெத்திலி மீனை சேர்த்து லேசாக பிரட்டி எண்ணை பிரியும் வரை கொதிக்க விட்டு இரக்கவும்.சுவையான நெத்திலி மீன் ரெட் கிரேவி ரெடி

கவனிக்க:

மீனை போட்டத்தும் சும்மா சும்மா கரண்டிய போட்டு கிளற கூடாது. அப்படியே சட்டியை இரண்டு பக்கமும் சேர்த்து சுழற்றி விடனும். கூட்டு பதமாக, மிதமான தீயில் கொதிக்க விடவேண்டும்.
இங்கு வெளி நாடுகளில் தக்காளி பேஸ்ட் டின் பாக்கெட் களில் கிடைக்கிறது அப்படி தக்காளி பேஸ்ட் கிடைக்க வில்லை என்றால், நல்ல பழுத்த ரெட் தக்காளி ( 5) யில் , காஞ்ச மிளகாயயை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள், 

அப்படி இல்லை என்றால் காஷ்மீரி மிளகாய் தூள் காரம் இருக்காது கலர் ஃபுல்லாக இருக்கும் அதை பழுத்த ரெட் தக்காளியுடன் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். 

மிளகாய் தூள் சேர்க்கும் போது கொஞ்சம் குறைத்து சேர்த்து கொள்ளுங்கள். நெத்திலி மீன் ரெட் கிரேவி ரெடி.
Tags: