சுவையான கீரை சாம்பார் செய்வது எப்படி?





சுவையான கீரை சாம்பார் செய்வது எப்படி?

முருங்கைக்கீரை என்றில்லை, எல்லா கீரைகளிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. நார்ச்சத்து, அனைத்து வைட்டமின்கள், இரும்புச்சத்து என சத்துகள் அதிகம். அதற்காக அளவுக் கதிகமாகவும் எடுக்கக் கூடாது. 
சுவையான கீரை சாம்பார் செய்வது எப்படி?
நார்ச்சத்து அதிகமுள்ள உணவு என்பதால் அளவு கடந்து உண்ணும் போது வயிற்றுப்போக்கு ஏற்படும்.  உணவு சகிப்புத்தன்மை (Food intolerance) எனப்படும் பிரச்னை இருக்கும் போது நாம் உண்ணும் உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தி, உணவை வெளியேற்றி விடும்.
கீரைகள் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். கல்லீரல் ஆரோக்கியமாகும். சருமமும் கூந்தலும் ஆரோக்கியமாகும். கண் பார்வைக்கு நல்லது. 

ஆனால், உணவு சகிப்புத் தன்மை இருப்பவர்களுக்கு இந்த உணவுகள் ஏற்றுக் கொள்ளாமல் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். முருங்கைக் கீரைக்கு மலச்சிக்கலை குணப்படுத்தும் தன்மை உண்டு. 

அதையே அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்றவை வரலாம். வயிற்று உப்புசம் வரலாம். எதுக்களிக்கும் பிரச்னை ஏற்படலாம்.
தேவையான பொருட்கள்:

கீரை (எந்த வகை கீரையானாலும்) பொடியாக நறுக்கியது - 1 கப்

துவரம் பருப்பு - 1/2 கப்

புளி - எலுமிச்சம் பழ அளவு

சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிப்பதற்கு:

எண்ணை - 2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

சாம்பார் வெங்காயம் - 4 அல்லது 5 (நீள வாக்கில் வெட்டியது)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு என்ன செய்ய போகிறது என்று நினைக்க வேண்டாம் !

செய்முறை: 
சுவையான கீரை சாம்பார் செய்வது எப்படி?
துவரம் பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீரும், மஞ்சள் தூளும் சேர்த்து குக்கரில் குழைய வேக விட்டு எடுக்கவும். புளியை தண்ணீரில் ஊற வைத்து, சாற்றை பிழிந்து எடுக்கவும். 

புளித் தண்ணீர் 2 கப் அளவிற்கு இருக்க வேண்டும். ஒரு வாணலி யில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பி த்ததும், வெந்தயம், பெருங்காயம் போட்டு சற்று வறுத்து, அதில் வெங்காய த்தைப் போட்டு வதக்கவும்.

பின் அதில் தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும். தக்காளி வதங்கி யவுடன், வேக வைத்த பருப்பையும், உப்பையும் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், புளித்தண்ணீரில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கி ஊற்றவும். 
ஸ்விம்மிங் பூல் தண்ணீரால் உடலுக்கு வரும் ஆபத்து என்ன?
மேலும் சில வினாடிகள் கொதித்தப் பின், அதில் கீரையைப் போட்டுக் கிளறி விட்டு, மிதமான தீயில் மூடி வைத்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் கொதித்த பின் இறக்கி வைக்கவும்.
Tags: