தனியா பிரியாணி செய்வது எப்படி?





தனியா பிரியாணி செய்வது எப்படி?

கொத்தமல்லி அனேகமாக உலகின் அனைத்து நாடுகளின் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை உணவுப் பொருளாக இருக்கிறது. 
தனியா பிரியாணி செய்வது எப்படி?
இந்த கொத்த மல்லியின் விதைகள் நமது நாட்டில் தனியா என அழைக்கப் படுகின்றன. தனியா விதை தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். 

இந்த நீரை தொடர்ந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து இந்த பானத்தை குடிப்பதன் மூலம் சிறந்த எடை மேலாண்மைக்கு உதவுகிறது.  

கொத்தமல்லி விதை நீர் ஆரோக்கியத்திற்கு ஒரு சர்வ மருந்தாக செயல்படுகிறது. இந்த விதைகளின் நீரில் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. 

இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தின் பொலிவை அதிகரிக்கச் செய்கிறது. இந்த டிடாக்ஸ் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பது அதிக பலன் தரும். 
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர முகப்பரு பிரச்சனை நீங்கும். இந்த தனியாவும் கொத்த மல்லியை போன்று பல ஊட்டச்சத்துக்கள் மிகுந்ததாக இருப்பதால், நமது நாட்டின் உணவு தயாரிப்பு மற்றும் மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது.

இன்று இந்த தனியாவை பயன்படுத்தி பிரியாணி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை:
பாசுமதி அரிசி - 2 கப்,

தனியா - அரை கப்,

பெரிய வெங்காயம் - 3,

தக்காளி - 4,

தயிர் - அரை கப்,

உப்பு - தேவையான அளவு,

நெய் - 2 டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன். 
பாதரசம் எந்தெந்த மீன்களில் அதிகளவு இருக்கிறது தெரியுமா?
அரைக்க:

புதினா - அரை கட்டு,

மல்லித் தழை - அரை கட்டு,

பச்சை மிளகாய் - 6,

இஞ்சி - ஒரு துண்டு,

பூண்டு - 5 பல்,

பட்டை - ஒரு துண்டு,

லவங்கம் - 2,

ஏலக்காய் - 2.  
HDL நல்ல கொழுப்பு ஏன்?
செய்முறை:
தனியா பிரியாணி செய்வது எப்படி?
தனியாவை 4 கப் தண்ணீரில் வேக வையுங்கள். தனியா வெந்து, தண்ணீர் 3 கப் அளவுக்கு வந்ததும், தண்ணீரை வடித்துத் தனியே வையுங்கள். 

பாசுமதி அரிசியைக் கழுவி ஊற வையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத் தெடுங்கள். குக்கரில் நெய், எண்ணெயைக் காய வைத்து வெங்காயம் சேருங்கள். 

வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி தயிர், தனியா வேக வைத்த தண்ணீர், உப்பு சேர்த்து 
அனீமியா என்றால் என்ன?
ஐந்து நிமிடம் கொதித்ததும் அரிசி சேர்த்து நன்கு கிளறி, மூடி போட்டு ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள்.
Tags: