அழகை பேணி காப்பதில் கடலை மாவிற்கு முக்கிய பங்கு உள்ளது. பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும் தன்மை கடலை மாவிற்கு உண்டு. தினமும் முக அழகிற்கு, கடலை மாவு பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம்.
கடலை மாவுடன் கொஞ்சம் வெள்ளரி சாறு கலந்து நன்கு குழைத்து பாதிப்பு உள்ள சரும பகுதிகளில் நன்கு பூசவும். பின் இருபது நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். சருமம் வழுவழுப்புடன் திகழும்.
கடலை மாவில் சிறிது நீரை கலந்து, முகத்தில் பூசி கொள்ளுங்கள். நன்கு உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இவ்வாறு செய்து வருவதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு - ஒரு டம்ளர்
அரிசி மாவு - கால் டம்ளர்
வெங்காயம் - முன்று
பச்ச மிளகாய் - 1
பூண்டு - 4 பல் (பெரியது)
இஞ்சி - ஒரு அங்குலம் அளவு
புதினா, கருவேப்பிலை - கால் கட்டு
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
டால்டா ( பட்டர்) - ஒரு மேசை கரண்டி
உப்பு - தேவைக்கு
இட்லி சோடா - அரை பின்ச்
பெருங்காயப்பொடி - கால் தேக்கரண்டி (தேவைப்பட்டால்)
செய்முறை :
வெங்காயம் நீளவாக்கிலும், பச்சமிளகாயை பொடியாகவும் அரிந்து வைக்கவும். புதினா, கருவேப்பிலையை மண் போக கழுவி தண்ணீரை வடித்து பொடியாக (பைன் சாப்பாக) அரிந்து கொள்ளவும்.
இஞ்சியை கேரட் துருவியில் துருவி கொள்ளவும், பூண்டை தட்டி வைக்கவும். வெங்காயத்தில் பச்சமிளகாய், புதினா, கருவேப்பிலை, பூண்டு, இஞ்சி, பெருங்காயப் பொடி, இட்லி சோடா, உப்பு சேர்த்து வெறவி கொள்ளவும்.
அதில் டால்டா (அ) பட்டரை லேசாக உருக்கி ஊற்றி கிளறவும். கடைசியாக கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து பிசற வேண்டும். தண்ணீர் சிறிதும் சேர்க்கக் கூடாது. ரொம்ப கட்டியாக இருந்தால் கொஞ்சமா கை அளவு எடுத்து தெளித்து பிசறவும்.
பகோடா சுட தேவையான அளவு எண்ணையை காய வைத்து கருகாமல் தீயின் தணலை மீடியமாக வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வானலியில் கொள்ளும் அளவிற்கு கலந்து வைத்த கலவையை கிள்ளி கிள்ளி போடவும்.
ரொம்ப மொத்தையாவும் போட கூடாது, ரொம்ப உதிரியாவும் போட கூடாது. சூப்பரான மொரு மொரு பகோடா ரெடி.
டிப்ஸ் டிப்ஸ் :
பகோடா செய்யும் போது கடலை மாவில் செய்வதால் கண்டிப்பாக துருவிய இஞ்சி சேர்த்து கொண்டால் செரிமானத்திற்கு நல்லது, கேஸ் பிராப்ளத்துக்கும் நல்லது.
ஏதாவது காய்கறிகள் (முட்டை கோஸ், கேரட்) போன்றவை சேர்த்து கொள்ள வேண்டும் பகோடா எல்லோருக்கும் பிடிக்கும் காய் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு காய்கறிகள் கொடுத்த மாதிரியும் ஆகிடும்.
புதினா, கொத்துமல்லி, கீரை சேர்த்தும் பகோடா செய்யலாம். முந்திரி பருப்பு பகோடா செய்யும் போது முழுசா போடாமல் அதை சிறிய துண்டுகளாக வெட்டி சேர்த்தால் சுவை இன்ன்மும் அதிகமாக இருக்கும்.
எல்லா பக்கோடாவிலும் முந்திரி தெண்படும். இப்படி செய்வதால் குறைந்த அளவு முந்திரி போதுமானது.