சுவையான மாம்பழ சாம்பார் செய்வது எப்படி?





சுவையான மாம்பழ சாம்பார் செய்வது எப்படி?

பொதுவாக மாம்பழத்தை அப்படியே முழுதாக கடித்து சாப்பிடுவதுதான் நல்லது. அதற்குப் பதிலாக சர்க்கரை, பால் போன்ற பிறப் பொருட்களுடன் சேர்த்து ஜுஸாகவோ அல்லது ஷேக் போல் செய்தோ சாப்பிட்டால், அதன் ஊட்டச்சத்துகள் குறையக் கூடும். 
சுவையான மாம்பழ சாம்பார் செய்வது எப்படி?
ஆகவே எப்போது மாம்பழம் சாப்பிட்டாலும் அதை முழுதாக உட்கொள்ளுங்கள். பழுத்த மாம்பழம் சாப்பிடுவதால் அஜீரணம், வயிற்று உப்புசம், மலச்சிக்கல் போன்றவை நீங்கும். 

மாம்பழத்தில் காணப்படும் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன.
மருத்துவர்கள் சொல்வது என்ன? முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் சுவை மட்டுமின்றி சத்துகளும் நிரம்பியுள்ளது. மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரை அளவு அதிகம். 

எனவே மாம்பழத்தை உண்ணும் போது, அது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் என்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்றும் பலர் கருதுகின்றனர். 
இதில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவற்றில் நிறைந்துள்ளன. இது நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது மற்றும் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துகிறது. 

கூடுதலாக, மாம்பழத்தில் உணவு நார்ச்சத்து, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - 1/2 கப்

புளி - சிறு எலுமிச்சம் பழ அளவு

சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

நாட்டு மாம்பழம் (சிறிதாக இருக்கும்) - 4 முதல் 5 வரை

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

சாம்பார் வெங்காயம் - 4 அல்லது 5

கறிவேப்பிலை - சிறிது

மாவு சத்து மிக்க ஆலூ பரோத்தா செய்வது எப்படி?

செய்முறை:

சுவையான மாம்பழ சாம்பார் செய்வது எப்படி?
துவரம் பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீரும், மஞ்சள் தூளும் சேர்த்து குக்கரில் குழைய வேக விட்டு எடுக்கவும். புளியை தண்ணீரில் ஊற வைத்து, சாற்றை பிழிந்து எடுக்கவும். 
ரமலான் கேரளா மட்டன் மசாலா செய்வது எப்படி?
புளித் தண்ணீர் 3 கப் அளவிற்கு இருக்க வேண்டும். மாம்பழத்தைக் கழுவி, இரண்டு பக்கமும் முக்கால் பாகம் கீறிக் கொள்ளவும். அடி பாகம் வரை வெட்டாமல், மாம்பழத்தின் அடி பாகத்தை அப்படியே வைத்துக் கீறிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளித் தண்ணீரை விட்டு, அதில் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். புளித் தண்ணீர் கொதித்து வரும் பொழுது மாம்பழத்தைப் போட்டு மூடி வைத்து, மிதமான தீயில் ஓரிரு நிமிடங்கள் வேக விடவும். 

பின்னர் அதில் வேக வைத்துள்ளப் பருப்பைச் சேர்த்து மேலும் ஓரிரு நிமிட ங்கள் கொதிக்க விடவும். பின்னர் தாளிக்க கொடுத்துள்ள வற்றைத் தாளித்துக் கொட்டி இறக்கி வைக்கவும்.

பின்குறிப்பு:
இந்த மாம்பழ சாம் பாருக்கு சின்ன சைஸில் கிடைக்கும் நாட்டு மாம்பழ த்தை முழுதாகப் போட்டு செய்வார்கள். பெரும்பாலும் அவரவர் தோட்டத்தில் விளையும் பழத்தில், சாம்பார், மோர்க்குழம்பு, 

ரசம் என்று வித  விதமாக மாங்காய் சீசனில் செய்வார்கள் மார்க் கெட்டிலும் இந்த வகை நாட்டுப் பழங்கள் கிடைக்கும்.

அப்படி கிடைக்கவில்லை என்றால், பெரிய மாம்பழத்தை (பெரிய துண்டு களாகப் போட்டு) உபயோ கித்தும் செய்யலாம். 
இந்த சாம்பாரின் சிறப்பு, மாம்பழச்சாறு சாம்பாருடன் கலந்து தனி சுவையைக் கொடுக்கும். சாம்பாரிலுள்ள மாம்பழத்தை சாப்பிட் டால், இனிப்பும், காரமுமாக அதும் ஒரு வித தனி சுவையுடன் இருக்கும்.
Tags: