மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
சில வகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்.
பொதுவாகவே சிறிய வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் இவை கடல்பாசியை அதிகமாக உண்டு வாழ்வதால் ஒமேகா 3 அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில் சால்மன் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைவாக இருக்கிறது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகும் என தெரியவந்துள்ளது. சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது, வாரத்திற்கு ஒருமுறையாவது உணவுடன் மீனை சேர்த்து கொள்வது நல்லது.
சரி இனி மீன் பயன்படுத்தி அருமையான கிரில் ஃபிஷ் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். இது டயட் செய்பவர்களுக்கு ஏற்ற டிஷ். சப்பாத்தி குப்பூஸுடன் சாப்பிட சூப்பாரான அயிட்டம்.
தேவையான பொருட்கள்
மீடியமான முழு மீன் - இரண்டு
பூண்டு பொடி - ஒரு தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேகக்ரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு தூள் - ஒன்னறை தேக்கரண்டி(தேவைக்கு)
எலுமிச்சை சாறு - முன்று மேசை கரண்டி
பப்பரிக்கா பவுடர் - அரை தேக்கரண்டி
வினிகர் - ஒரு தேக்கரண்டி
உருளை கிழங்கு - இரண்டு
வெங்காயம் – ஒன்று
மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் சிக்கல்களும்?
செய்முறை
மீனை சுத்தம் செய்து இடை இடையே நன்கு ஆழமாக கீறி விடவும்.
மேலே குறிப்பிட்ட அனைத்து மசாலாக் களையும் மீனில் நன்கு பிரட்டி முன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
200 டிகிரியில் முற்சூடு செய்யபட்ட அவனில் 35 நிமிடம் பேக் செய்யவும். முதலில் உருளை கிழங்கை வட்ட வடிவமாக கட்செய்து டிரேயின் அடியில் வைத்து
அதன் மேல் மீனை வைத்து மேலே வெங்காயத்தை வட்ட வடிவமாக கட்செய்து வைக்கவும். இது பேக் செய்யும் போது தண்ணீர் கீழே நிற்கும்.அதற்கு முதலில் மேல் தீயில் 15 நிமிடம் வைக்கவும்.
அசைவ உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ஆபத்து !
அடுத்து மேலும் கீழும் உள்ள தீயை செலக்ட் செய்து 10 நிமிடம் வைக்கவும். கடைசியாக அடியில் டிரேயில் வைத்து பத்து நிமிடம் வைக்கவும்.குபூஸுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
சுவையான பேக்டு முழு மீன் கிரில் ரெடி.
இதில் உள்ள குபூஸ் வீட்டில் என் கை பக்குவதில் செய்தது.
முன்பு அடிக்கடி செய்வேன்.
இப்ப ஓவன் ரிப்பேர் ஆனதில் இருந்து செய்வதில்லை, எல்லாம் வீட்டு கிட்டேயே நிறைய க்டைகள் வந்து விட்டது, ஆகையால் அவ்வளவா செய்வதில்லை.
இப்ப ஓவன் ரிப்பேர் ஆனதில் இருந்து செய்வதில்லை, எல்லாம் வீட்டு கிட்டேயே நிறைய க்டைகள் வந்து விட்டது, ஆகையால் அவ்வளவா செய்வதில்லை.