சூப்பரான பாகற்காய் புலாவ் செய்வது எப்படி?





சூப்பரான பாகற்காய் புலாவ் செய்வது எப்படி?

பாகற்காய்... இந்தப் பெயரைச் சொன்னவுடன் பலருக்குக் குமட்டல் வந்து விடும். சிலர் வாய் முழுக்க அதன் கசப்பு படர்ந்து விட்டது போல உணர்வார்கள். பெரியவர்களுக்கே இப்படி யென்றால், குழந்தைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 
பாகற்காய் புலாவ் செய்முறை
`உவ்வே...’ காட்டி ஓடுகிற செல்லங்களே அதிகம். பாகற்காய் சமைக்கிற தினத்தில் அவர்களைச் சாப்பிட வைக்க, ஓடிப்பிடித்து விளையாட வேண்டியிருக்கும். 

ஆனால், பாகற்காய் அந்த அளவுக்கு வெறுத்து ஒதுக்க வேண்டிய காய் அல்ல. நமக்கு நன்மை தரும் பல அம்சங்கள் இதில் உள்ளன. புரோக்கோலியில் இருப்பதைவிட இரண்டு மடங்கு பீட்டா கரோட்டின் இதில் உண்டு. 
இந்த பீட்டா கரோட்டின் தான், நம் உடலுக்குள் வைட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு சேகரமாகும்.  இது நமது கண், தோல் போன்றவற்றுக்கு நல்லது. பசலைக்கீரையில் இருப்பதைவிட இரண்டு மடங்கு கால்சியம் இதில் உண்டு. 

இது நமது எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும். வாழைப்பழத்தில் உள்ளதைவிட இரண்டு மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. தசை வலிமை, நரம்பு மண்டலச் செயல்பாடு, இதய நலன் போன்றவற்றுக்குப் பொட்டாசியம் உதவும். 
இது கலோரி குறைவான ஓர் உணவு. இதில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட் (Folate), சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன.

தேவையான பொருள்கள் :

பாசுமதி அரிசி -500 கிராம்

பாகற்காய் -200கிராம்

வெங்காயம் -1

பச்சை மிளகாய் -3

தேங்காய் பால் -1/2 கப்

இஞ்சி, பூண்டு விழுது -1 ஸ்பூன்

பட்டை -2

கிராம்பு -7
ஏலக்காய் -7

சீரகம் -1/2 ஸ்பூன்

சர்க்கரை -1சிட்டிகை

புதினா, கொத்த மல்லி - தேவையான அளவு

உப்பு, வெண்ணெய், எண்ணெய் - தேவையான அளவு
இந்தியன் டாய்லெட் vs வெஸ்டர்ன் டாய்லெட் !
செய்முறை :

பாகற்காயை கசப்பு போவதற்காக அரைமணி நேரம் தயிரில் ஊற வைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும், பின் பச்சை மிளகாய் போட்டு லைட்டாக வதக்கவும்.

பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து கிளறி சீரகம் போட்டு லைட்டாக வதக்கினால் போதுமானது இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, புதினா, கொத்த மல்லி தூவி வதக்கவும்.
ஒரு கப்பிற்கு ஒன்றரை மடங்கு தண்ணீர் கடாயில் ஊற்றி மீதமுள்ள தேங்காய் பாலையும் இதில் கலந்துக் கலாம். தயிரில் ஊற வைத்த பாகற்காயை மட்டும் கழுவி போட வேண்டும். 

பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். எலுமிச்சை பழச்சாறு பிழிந்து விட வேண்டும்.
உணவு உண்டவுடன் டாய்லெட் செல்வது நல்லதா?
தண்ணீர் கொதி வந்த பிறகு அரிசியை சேர்த்து வேக விட்டு தம் கட்டி இறக்கினால் சுவையான பாகற்காய் புலாவ் தயார். விரும்பினால் பட்டர் அல்லது நெய் கலந்து கிளறி பரிமாறலாம்
Tags: