பேபி கார்ன் என்பது ஆரம்பத்தில் காலத்திலேயே அறுவடை செய்யப்படும் மக்காச்சோள தானியமாகும். இந்த பேபி கார்ன்கள் அதன் தண்டுகளோடு பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடப்படுகின்றன.
பேபி கார்னின் தண்டுகள் மிகவும் மென்மையாக இருப்பதால், நன்கு வளர்ந்த மக்காச்சோளத்தின் தண்டுகளில் இருந்து பருப்புகள் பிரித்தெடுக்கப் படுவது போல அவை பிரிக்கப் படுவதில்லை.
பேன் கார்ன் என்பது டென்ட் கார்ன், இந்தியன் கார்ன் மற்றும் ஸ்ட்ரைப்டு கார்ன் போன்ற பல்வேறு வகைகளில் கிடைக்கிறது.
சோளத்துடன் ஒப்பிடும் போது பேபி கார்னில் குறைவான கலோரி உள்ளது மற்றும் கிட்டத்தட்ட கொழுப்பு என்பது சுத்தமாக இல்லை.
பேபி கார்ன் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்று மற்றும் உங்கள் தினசரி உணவில் இதனை சேர்க்கலாம். தற்போது இந்த பாபி கார்ன்கள் கான்டினென்டல் மற்றும் ஆசிய உணவு வகைகளில் இன்றியமையாத பொருளாக மாறி விட்டன.
இது சாலட்களில் பயன்படுத்தப்படுகிறது. பேபி கார்னில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ, ஃபோலேட், தியாமின் மற்றும் பாந்தோத்தெனிக் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
மாலையில் மொறு மொறுவென்று சூடாக ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? அப்படியெனில் அப்போது வீட்டில் பேபி கார்ன் இருந்தால், அதனைக் கொண்டு 65 செய்து சாப்பிடுங்கள்.
இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இப்போது அந்த பேபி கார்ன் 65 ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் - 8 (சிறியது)
சாட் மசாலா பவுடர் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
மாவிற்கு...
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/4 டீஸ்பூன்
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சமையல் சோடா - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பேபி கார்னை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
சிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி?
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
பேபி கார்ன்னை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து மேலே சாட் மசாலாவைத் தூவினால், பேபி கார்ன் 65 ரெடி