முள்ளும் இல்லாமல், முதுகெலும்பும் இல்லாமல் ஒரு மீன் இருக்குமானால், அதுதான் கணவாய் மீன்கள். இதற்கு கடம்பா மீன்கள் என்றும் சொல்வார்கள். ஏகப்பட்ட நன்மைகளை தரக்கூடியது இந்த மீன். இதனுடைய தலைக்குள் ஒரு சுரப்பி இருக்கிறதாம்.
அதற்கு பிறகு ஓடிப்போய் பாறைகளுக்குள் ஒளிந்து கொள்ளும். அதே போல, எதிரிகளிடமிருந்து தப்பிக்க, உடலின் தோல்களையும் அடிக்கடி மாற்றிக் கொள்ளும். இதன் சதைகளும் பார்ப்பதற்கு மிக லேசாக இருக்கும்.
மீனவர்கள் வலையை போட்டு பிடித்தாலே, இந்த சதைகள் சிதைந்து விடுமாம். அதனால் தான், எப்போதுமே, தூண்டிலை போட்டு, மீனவர்கள் இந்த கணவாயை பிடிப்பார்களாம்.
வெளி மாநிலங்களிலும் இந்த மீனுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இந்த கணவாய் மீனில் பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர், ஒமேகா-3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அது மட்டுல்லாமல், செலினியம் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் இந்த மீனில் நிறைந்துள்ளது.
அதாவது, 100 கிராம் கணவாய் மீனில் கிட்டத்தட்ட 44.8 µg செலினியம் இருக்கிறதாம். இந்த செலினியம் என்பது ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது என்பதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த இந்த மீன் தேவையானதாக இருக்கிறது.
கனவாய் மீனை சாப்பிடுவதால், இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது. புற்றுநோய் தொடர்பான செல்கள் உருவாவது அழிக்கப்படுகிறது. அத்துடன், ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள் இந்த மீனை சாப்பிடலாம்.
இதனால், அனிமிக் தொந்தரவு நீங்கி, ரத்த சிவப்பணுக்களும், வெள்ளை அணுக்களும் அதிகரிக்கக் கூடும். அத்துடன், மூளைக்கு தேவையான ஆக்சிஜனையும் இந்த மீன் வழங்குகிறது. இதனால், மூளை வளர்ச்சியும் அதிகமாகிறது.
மீன் எண்ணெய் சாப்பிடமாட்டீங்களா? உடனே சாப்பிட ஆரம்பிங்கப்பா !
தேவையான பொருட்கள் :
கணவாய் மீன் – அரை கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை
மிளகாய் – 2
இஞ்சி,
பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரகதூள் – 2 ஸ்பூன்
எண்ணெய்
கடுகு உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை.
செய்முறை :
கணவா மீனை சுத்தமாக ஆய்ந்து கழுவி சிறிய துண்டுக ளாக வெட்டி கொள்ளுங்கள். ஒரு வாணலில் கணவா மீனை போட்டு அதனுடன் கொஞ்சம் உப்பு, கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விடாமல் அடுப்பில் வைத்து மிதமான தீயில் வேக விட வேண்டும்.
கணவா தலைகள் வேகும் போதே அதிகமாக நீரை வெளியிடும். இந்த நீரை வடிகட்டி கீழே கொட்டி விடவும். இப்படிக் கொட்டி விடுவதால் கணவா மீனின் கவுச்சி வாடை கிட்டத்தட்ட முற்றிலுமாக போய் விடும்.
இப்போது அதை தனியாக வைத்து கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்த மல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்தபின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கறிவேப்பிலை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
டெங்கு மற்றும் சிக்குன் குனியா பற்றிபயப்பட வேண்டாம் !
பின் அதில் வேக வைத்த கணவா மீனை சேர்த்து சிறிது வதக்கிய பின், மிளகாய் துாள், சீரகப்பொடி, சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வேகவிட வேண்டும்.
இந்த நேரத்தில் ருசி பார்த்து காரம் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம். அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிவிட வேண்டும். நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் கொத்துமல்லி தழை தூவி இறக்கி விட வேண்டும்.
இந்த நேரத்தில் ருசி பார்த்து காரம் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம். அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிவிட வேண்டும். நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் கொத்துமல்லி தழை தூவி இறக்கி விட வேண்டும்.
கணவாய் மீன் வறுவல் ரெடி! இதை சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம்.