இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் ஆரோக்கியமான உணவுகளில் புரத சத்து அதிகம் உள்ள சோளத்திற்கு முக்கிய பங்குண்டு.
இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கும் பண்பு காரணமாக இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது.
அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக முடக்கு வாதம் தொடர்பான வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
இரும்பு சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் காப்பர் சத்துக்கள் உடலுக்கு வேண்டிய புத்துணர்ச்சியை அளிக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய சத்தான வைட்டமின் பி மற்றும் போலேட் போன்றவை அதிகளவில் உள்ளது.
சோளம் மாவாகவும், ரவை போன்ற வடிவிலும் கிடைப்பதால் சோள உப்புமா, சோள ரொட்டி, சோள கேக், சோள லட்டு விதவிதமான உணவு வகைகளும் செய்யலாம்.
தினமும் சோளத்தை உங்கள் உணவில் சேரத்து அதன் பலன்களை பெறுவது அவசியம்.
தேவையான பொருட்கள்
சோளம் பிஞ்சு - 1
மைதா - 1 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்
முட்டை - 1/2
சோயா சாஸ் - 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பூண்டு - 6
வெங்காயம் - 2
வண்ண குடை மிளகாய்கள் (சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள்) - 3
மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 1/2 டீஸ்பூன்
சிவப்பு கலர் - ஒரு சிட்டிகை
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சோள பிஞ்சு, மைதா, சோள மாவு, முட்டை கரு, சோயா சாஸ், உப்பு, மிளகாய்த் தூள், சிவப்பு கலர் பொடி ஒரு சிட்டிகை போட்டு பிசைந்து பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டு, சதுரமாக நறுக்கிய வெங்காயம், சதுரமாக நறுக்கிய மூன்று வண்ண குடை மிளகாய்,
உப்பு சேர்த்து வதக்கி அத்துடன் மிளகாய் விழுது மற்றும் சோயா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து அதன் பச்சை வாசனை போன பின்பு வறுத்து வைத்துள்ள சோள பிஞ்சு போட்டு கிளறவும்.
இறுதியில் கரைத்து வைத்துள்ள சிவப்பு கலர் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் வெங்காயத் தாள் தூவி பரிமாறவும்.
குறிப்பு :
பரோட்டா, சப்பாத்தி, நான் போன்ற உணவுகளுக்குப் பொருந்தும்.