சிக்கன் அனார்தான (ட்ரை) செய்வது எப்படி?





சிக்கன் அனார்தான (ட்ரை) செய்வது எப்படி?

மாதுளம் பழத்தில் வைட்டமின் சி, கே, இரும்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், புரதசத்து ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பழத்தில் உள்ள பருப்புகள் தனி சிறப்பும், பல்வேறு நோய் தீர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளது.  
சிக்கன் அனார்தான (ட்ரை) செய்வது எப்படி?
ஆராய்ச்சியின் படி, நாள்பட்ட நோய்கள், புற்றுநோய் மற்றும் பல இதய நோய்களின் வாய்ப்புகளை குறைக்க உதவும் மாதுளை தினமும் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. 

இது தவிர, சகிப்புத்தன்மை, விரைவான தசை மீட்பு, சிறுநீரக கற்களைத் தடுப்பது மற்றும் சிறந்த செரிமான அமைப்பை உருவாக்குவதையும் நீங்கள் எதிர்பார்க்கலாம். 

ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. 
செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும். 

குறிப்பாக மன அழுத்தத்திற்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் போதை பொருள் பாவனையில் இருந்து விடுப்பட சிகிச்சை பெற்று வருபவர்கள் மாதுளம் பழத்தை சாப்பிட கூடாது
தேவையான பொருட்கள்

சிக்கன் – ½ கிலோ

அனர்தான (மாதுளை விதை) – 2 டீஸ்பூன்

வெந்தயம் – ½ டீஸ்பூன்

தனியா – 2 டீஸ்பூன்

மிளகு – 2 டீஸ்பூன்

பூண்டு – 6 பல்

தேங்காய் – 2 துண்டு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

காஷ்மீரி மிளகாய் - 4

காய்ந்த மிளகாய் - 2

சீரகம் – 1 டீஸ்பூன்

கசகசா – 2 டீஸ்பூன்

கல்பாசி – ½ டீஸ்பூன்

வெங்காயம் - 2

புளித் தண்ணீர் – எலுமிச்சை அளவு புளியைக் கரைத்தது
கொத்துமல்லி – ஒரு கொத்து

பட்டை - 2

ஏலக்காய் - 3

கிராம்பு - 5

பிரயாணி இலை - 2

மராத்தி முங்கு - 1

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

எண்ணெய் & நெய் – தலா 2 டீஸ்பூன்
வெயில் கால தலைவலிக்கு காரணங்கள் !
செய்முறை
சிக்கன் அனார்தான ட்ரை

ஒரு வாணலியில் சிறிதளவு வெந்தயம், தனியா, மிளகு, காஷ்மீரி மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம், கசகச, பட்டை, ஏலக்காய், கிராம்பு இவை அனைத்தும் நன்றாக வறுத்து நன்றாகப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிதளவு நெய் விட்டு பல்லு பல்லாக நறுக்கிய தேங்காயை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, கல்பாசி, ஏலக்காய், மராத்தி முங்கு, காய்ந்த மிளகாய், இடித்த பூண்டு இவை அனைத்தும் நன்றாக வதக்கி பிறகு நறுக்கிய வெங்காயம், 
மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு மற்றும் சிக்கன் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு விசில் விட்ட பிறகு அரைத்து வைத்துள்ள கலவையை தேவையான அளவு மற்றும் 
விண்வெளி பயணம் உயிருக்கு ஆபத்தானதா?
அனர்தான தூள் மற்றும் சிறிதளவு புளித்தண்ணீர் சேர்த்து, மற்றும் உப்பு, கொத்து மல்லி, கறிவேப்பிலை சேர்த்து மீண்டும் ஒரு விசில் வந்த பிறகு pressure அடங்கியவுடன் வறுத்து வைத்துள்ள தேங்காயை தூவி பறிமாறவும்.

குறிப்பு

இதை அனைத்து விதமான வெரைட்டி ரைஸ், ப்ரைடு ரைஸ், புலாவ், இட்டிலி, பொங்கல், தோசை, இடியாப்பம் இவை அனைத்துக்கும் பொருந்தும்.
Tags: