தினசரி சிறதளவு முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டு வந்தால், ரத்தஅழுத்தம் சீராக இருக்கும். சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.
முந்திரியின் ஆரோக்கியத்தை முழுமையாக பெற வேண்டுமெனில் ஒரு நாளைக்கு 28.35 கிராம் முந்திரிதான் சாப்பிட வேண்டும். அதுவும் அவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடக் கூடாது.
பொன்னிறமாக எண்ணெய் இல்லாமல் வறுத்து சாப்பிட வேண்டும். நாம் சாப்பிடும் இறைச்சி உணவுகளில், பெரும்பாலா னவர்களுக்கு பிடித்தமான உணவு, கோழிக்கறி. குறைந்த விலை, குறைந்த கொழுப்பு காரணமாக கோழிக்கறி பிரபலமாகி உள்ளது.
கோழி தோலில் உள்ள கொழுப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு, நல்ல கொழுப்புகள் (unsaturated fats) என்று அறியப்படுபவை. இது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை மேம்படுத்த உதவுகின்றன.
இந்த கொழுப்புகளில் மூன்றில் ஒரு பங்கு கெட்ட கொழுப்பு (saturated fat). இது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது.
கோழியை தோலுடன் சேர்த்து சாப்பிட்டால், கலோரிகள் கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரிக்கும்.
சரி இனி முந்திரி பயன்படுத்தி டேஸ்டியான காஜூ (முந்திரி) சிக்கன் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். தேவையான பொருட்கள்
முந்திரி - 150 கிராம்
சிக்கன் - 500 கிராம்
கடுகி - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பட்டை - 2
கிராம்பு - 6
ஏலக்காய் - 3
வெங்காயம் - 2
ஜாதி பத்திரி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1
அன்னாசிப் பூ - 1
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பாதாம் - 2 டீஸ்பூன்
கசகசா - 50 கிராம்
செய்முறை :
நறுக்கி வைத்துள்ள வெங்காயம், ஊற வைத்த முந்திரி பருப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதி பத்திரி, அன்னாசிப் பூ, ஊற வைத்துள்ள கசகசா,
இவை அனைத்தும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்துப்பின் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
பின்னர் இஞ்சி பூண்டு விழுது போட்டு அதன் பச்சை வாசனை போனபின்பு மல்லித் தூள், மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பத்து முதல் 15 நிமிடங்கள் கொதித்த
பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கழித்து ஒரு சிட்டிகை கரம் மசாலா தூவி இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு பரிமாறவும்.
குறிப்பு
சப்பாத்தி, புக்கா, நான், ரொட்டி, புலாவ், பிரியாணி போன்ற உணவுகளுக்கு பொருந்தும்.