காலிபிளவர் அதிகமாக சாப்பிடும் சூழலில் தைராய்டு சுரப்பி சரியாக ஹார்மோன்களை உற்பத்தி செய்யாது. அதன் செயல்பாட்டில் குறுக்கிட வாய்ப்பு உள்ளது.
காலிஃபிளவரில் குறைந்த கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் காலிஃபிளவர் ஒரு சிறந்த உணவுத் தேர்வாகும்.
இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதன் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) மதிப்பெண் ஆகும். காலிஃபிளவரின் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவாக உள்ளது.
கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பது ஒரு ரேட்டிங் அமைப்பாகும், இது ஒரு உணவு எவ்வளவு விரைவாகவும், எவ்வளவு அதிகமாகவும் இரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது என்பதை அளவிடுகிறது.
தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
காலிஃப்ளவர் - 1
கொத்து மல்லி - சிறிதளவு
புதினா - ஒரு கைப்பிடி
பாஸ்மதி அரிசி - 500 கிராம்
ஆட்டா மாவு - 200 கிராம்
பட்டை கிராம்பு - 6
பிரியாணி இலை - 2
ஏலக்காய் - 6
மஞ்சள் தூள் - ¼
காஷ்மீர் மிளகாய் தூள் - 1 ½ டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
குங்குமப் பூ - 1 டீஸ்பூன்
நெய் - 3 டீஸ்பூன்
டால்டா - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தயிர் - ½ கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு வாணலியில் நெய், டால்டா சேர்த்து பட்டை, கிராம்பு, பிரியாணி இல்லை, ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி போட்டு நன்றாக வதக்கிய
பின்னர் மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், கரம் மசாலா வேக வைத்துள்ள பீன்ஸ், கேரட், காலிஃப்ளவர் மற்றும் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
பின்னர் அதனுடன் தயிர், புதினா, கொத்துமல்லி, தயாரித்து வைத்துள்ள சாதம், தேவையான உப்பு, குங்கும பூ, நெய் சேர்த்து தம் போடவும். தம் போடும் போது 5 நிமிடம் அதிக தீயும் பிறகு 15 நிமிடம் சிறு தீயில் தம் போடவும்.
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் 5 நிமிடம் வேக வைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திர த்தில் பாஸ்மதி அரிசி தண்ணீர் சேர்த்து 50% முதல் 60% வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஆட்டா மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து வைத்துக் கொள்ளவும். சப்பாத்தி போல தயாரித்து வைத்துக் கொள்ளவும்.
இதன் நடுவில் மேலே தயாரித்து வைத்துள்ள பிரியாணி இட்டு மூட வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு இந்த மூடப் பட்டுள்ள சப்பாத்தியை இரண்டு நிமிடத்தில் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.