ஹரி மிர்ச்சி கோஸ் புலாவ் செய்வது எப்படி?





ஹரி மிர்ச்சி கோஸ் புலாவ் செய்வது எப்படி?

உலகளவில் விளையும் மிக முக்கிய காய்கறிகளில் முட்டைக்கோஸ் ஒன்றாகும். இது ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் காலே ஆகியவற்றை உள்ளடக்கிய க்ரூசிஃபெரே (Cruciferae) குடும்பத்தைச் சேர்ந்தது. 
ஹரி மிர்ச்சி கோஸ் புலாவ் செய்வது எப்படி?
நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் செரிமானத்தை மேம்படுத்துவது வரை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கிகிறது. 

ஊட்டச் சத்துக்களின் பவர் ஹவுஸாக இருக்கும் முட்டைக்கோஸ் குளிர்கால டயட்டிற்கு மிகவும் ஏற்ற காய்கறியாக இருக்கிறது. 

உடல் பருமன், நீரிழிவு மற்றும் பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைப்பதில் முட்டைக்கோஸ் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கேன்சரை தடுக்கிறது: முட்டைக்கோஸில் அடங்கி இருக்கும் சல்ஃபர் கன்டன்ட்டான சல்ஃபோராஃபேன் (sulforaphane), குறிப்பாக இதற்கு புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆற்றலை கொடுக்கிறது. 

sulforaphane கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. சிவப்பு முட்டைக்கோஸ்-க்கு கலரை கொடுக்கும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸாக இருக்கின்றன அந்தோசயனின்ஸ் (Anthocyanins). 

இவை கேன்சர் செல்கள் உடலில் உருவாவதை மெதுவாக்கும் மற்றும் ஏற்கனவே உருவான கேன்சர் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.
தேவையான பொருட்கள் :

மட்டன் - ½ கிலோ

பச்சை மிளகாய் - 3

வெங்காயம் - 2

பாஸ்மதி அரிசி - 400 கிராம்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 ½ டீஸ்பூன்

தனியா -1 டீஸ்பூன்

ஜாதி பத்திரி - 1

ஜாதிகாய் தூள் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

நெய் - 3 டீஸ்பூன்

தயிர் - ½ டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப
கிட்னி கல் என்றால் என்ன? உருவாக காரணம் என்ன?
செய்முறை :
ஹரி மிர்ச்சி கோஸ் புலாவ் செய்வது எப்படி?
தனியா, ஜாதி பத்திரி, ஜாதிக்காய் தூள், சீரகம் இவை அனைத்தும் தனித்தனியாக வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.

குக்கரில் மட்டன், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், இரண்டு தேக்கரண்டி தயிர், அரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து 8 முதல் 10 விசில் வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.

இன்னொரு குக்கரில் நெய், எண்ணெய், சீரகம், புதினா, பச்சை மிளகாய், வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கிய பின் அரைத்த மசாலாவை சேர்த்து 

அதன் பச்சை வாசனை போன பின்,வேக வைத்துள்ள மட்டன் சேர்க்கவும். அத்துடன் அரை கப் தயிர் தேவையான உப்பு, வெந்நீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
தூங்கும் போது திடீரென கீழே விழுவது போன்ற உணர்வு ஏன்?
அதன்பின் பாஸ்மதி அரிசி, கொத்து மல்லி, சிறிதளவு புதினா மற்றும் நெய் சேர்த்து இரண்டு விசில் வைத்து இறக்கும் தருவாயில் நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.
Tags: