ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்முறை !





ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்முறை !

பால்கோவா தரமாகவும், சுவையாகவும் மற்றும் ஆரோக்யமாகவும் கிடைக்கும் ஒரே இடம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் தான். தண்ணீர் கலக்காத சுத்தமான பாலில் பால்கோவா செய்தால் அதன் ருசியே தனி. 
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா: 

பாண்டிய மன்னன் வல்லபதேவன் அரண்மனையில் பல விவாதங்களில் கலந்து கொண்டு வென்று வந்த பொன் மூலம் தனது மருமகனான பெருமாளுக்கு 11 அடுக்குகள் கொண்ட 192 அடி உயர கோபுரத்தைக் கட்டினாராம்.

அத்தனை பெருமை பெற்ற இந்த கோபுரம்தான் தமிழக அரசின் சின்னமாகவும் இருக்கிறது. உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கொண்டு பிரத்யேகசுவையில் தயாரிக்கப்படும் 

உணவுகள் உலகப் புகழ் பெறுவது போலவே, கோயில் பிரசாதங்கள் மட்டுமன்றி, கோயிலிருக்கும் ஊரில் கிடைக்கும் உணவுகளும் புகழ் பெற்றுவிடுகின்றன.

இந்த வகையில் உலக அளவில் மிக பிரபலமானது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. இது பாலும் சர்க்கரையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஓர் இனிப்புப் பலகாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்வது?

தேவையான பொருட்கள்:

பால் - 10 லிட்டர்

சர்க்கரை - 1/2 கிலோ

செய்முறை:

தண்ணீர் கலக்காத சுத்தமான பால் 10 லிட்டர் எடுத்து கொள்ள வேண்டும். அதை ஒரு அடி கனமான பத்திரத்தில் ஊற்றி, அதை அடுப்பில் வைத்து கிண்டி கொண்டே இருக்க வேண்டும். 

கிண்டி கொண்டே இருக்க வேண்டும், கிண்டாமல் விட்டு விட்டால் பால் அடிபிடித்து விடும். பால்கோவாவின் நிறம் மற்றும் சுவை மாறி விடும். 

இப்படியே ஒரு 20 நிமிடம் வரை பாலினை மட்டும் கிண்டி கொண்டு இருக்க வேண்டும்.
அதன் பிறகு பால் நன்கு சூடாகி கொதிக்க ஆரம்பித்த உடன் சர்க்கரையை பாலில் போட்டு மறுபடியும் கிண்ட வேண்டும். சுமார் ஒரு 15 நிமிடம் வரை கிண்டி கொண்டே இருக்க வேண்டும். 

இப்பொழுது பால் கட்டியாகி அதனுடன் இனிப்பும் கலந்து ஒரு வித இழகிய நிலையில் பால்கோவா வந்த பின் ஒரே முறை நன்கு கிண்டினால் நல்ல மனமுடன் கூடிய பால் மனம் மாறாத சுத்தமான பால்கோவா தயார்.

பால்கோவா தயாரிக்கும் பொழுது செய்ய வேண்டியது என்னவென்றால் பாலினைக் இடைவிடாமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். இதற்க்கு பொறுமை மிக மிக அவசியம், 

ஆனால் இப்பொழுது உள்ள பெண்மணிகளுக்கு பொறுமை இருப்பதே இல்லை. ஆனால் இவர்கள் பல பேக்கரி கடைகளுக்கு சென்று தரமற்ற பால்கோவா வாங்கி உண்பதினால் உடல் நலம் கெட்டுவிடும்
Tags: