அதிகமாக சத்து உள்ள முட்டைகோஸ் !





அதிகமாக சத்து உள்ள முட்டைகோஸ் !

முட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளன..
சத்து  உள்ள முட்டைகோஸ்
இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும்.

மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். குறிப்பாக முட்டைகோஸை சாப்பிடும் போது, அதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்து சாப்பிட கூடாது.

இல்லா விட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறி விடும். எனவே எப்போது இதனை சாப்பிட்டாலும் அளவாக வேக வைத்து சாப்பிடுவது நல்லது. சொல்லப் போனால், அதனை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது.
முட்டைகோஸ் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன வென்று பார்க்கலாம்… 

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை நிறைய உள்ளன. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும்.

மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப் பட்டுள்ளது. அல்சரால் அவதிப் படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்த லாம்.
ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.

உடலில் அழற்சி அல்லது உட்காயங் களால் பாதிக்கப் பட்டவர்கள் முட்டைகோஸை சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட் குளுட்டமைன், அவைகளை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து,

செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும். உலகளவில் விளையும் மிக முக்கிய காய்கறிகளில் முட்டைக்கோஸ் ஒன்றாகும். 

இது ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் காலே ஆகியவற்றை உள்ளடக்கிய க்ரூசிஃபெரே (Cruciferae) குடும்பத்தைச் சேர்ந்தது. நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் செரிமானத்தை மேம்படுத்துவது வரை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கிகிறது.

ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸாக இருக்கும் முட்டைக்கோஸ் குளிர்கால டயட்டிற்கு மிகவும் ஏற்ற காய்கறியாக இருக்கிறது. 

உடல் பருமன், நீரிழிவு மற்றும் பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைப்பதில் முட்டைக்கோஸ் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முட்டைக்கோஸில் அடங்கி இருக்கும் சல்ஃபர் கன்டன்ட்டான சல்ஃபோராஃபேன் (sulforaphane), குறிப்பாக இதற்கு புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆற்றலை கொடுக்கிறது. 

sulforaphane கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. சிவப்பு முட்டைக்கோஸ்-க்கு கலரை கொடுக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸாக இருக்கின்றன அந்தோசயனின்ஸ் (Anthocyanins). 

இவை கேன்சர் செல்கள் உடலில் உருவாவதை மெதுவாக்கும் மற்றும் ஏற்கனவே உருவான கேன்சர் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.
Tags: