ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்கை மரத்திற்குதான் உண்டு. எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை. அதிக நிழலை தரக்கூடியது.
பசுமை படர்ந்த மரமாக காட்சியளிக்கும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும். சாலை ஓரங்களில் நிழல் தரவும், மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப் படுகின்றன.
புவி வெப்ப மயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்கை மரமும் ஒன்று. வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு என்று கூறுகின்றனர்.
புங்கை மர விதையிலிருந்து பயோடீசல் (Biodisel) உருவாக்கும் திட்டத்தைப் பற்றி அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்த விதைகளிலிருந்து 30 - 40 சதவீத எண்ணெய்ச் சத்து உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
புங்கை மரம் கிராமத்திலும், கவிதைகளிலும் ஏன் சங்க இலக்கியங்களிலும் கூட அதிக அளவில் இடம் பெற்றுள்ளது.புங்க மரம் வீட்டின் முன்பு இருக்கக் கூடியது. இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது.
புங்கை இலைக்கு அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்ணை போக்கும் சக்தி உள்ளது. அதாவது, புங்கன் மர இலையை இடித்து சாறு பிழிந்து 30 முதல் 60 மில்லி அளவு குடித்து வர வயிற்றுப்புண் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.
மேலும், வெட்டுக்காயம், புண் ஆகியவற்றை ஆற்றும் சக்தியும் இலைக்கு உள்ளது. புங்கன் இலையை தூளாக்கி விளக்கெண்ணெய் விட்டுக் காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தடவி வர காயம் ஆறும்.
இதில்லாமல், புங்கன் இலையை பச்சையாக அரைத்து வைத்துக் கட்டினாலும் வெட்டுக்காயம் விரைவில் ஆறும். புங்கன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கத்தின் மீது வைத்து கட்டி வர வீக்கம் குறையும்.
இதில்லாமல், புங்கன் இலையை பச்சையாக அரைத்து வைத்துக் கட்டினாலும் வெட்டுக்காயம் விரைவில் ஆறும். புங்கன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கத்தின் மீது வைத்து கட்டி வர வீக்கம் குறையும்.
புங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல வகைகளில் மருத்துவக் குணம் கொண்டவை. தீப் புண்களை ஆற்றும் சக்தி புங்கை மரத்தின் பட்டைக்கு உள்ளது.
புங்கை மரத்தின் பட்டை, ஆலம்பட்டை, பழுத்த அத்தி இலை இவை மூன்றையும்
நன்கு அரைத்து புங்கன் எண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ
சுட்ட புண்களின் மீது தடவி வர புண்கள் வெகுவாக ஆறும்.
புங்கை மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர முல நோய் தீரும். புங்கை மரத்திற்கு அந்த காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
பல் துலங்க புங்கை மரத்தின் குச்சிகளைப் பயன்படுத்தி னார்கள். அந்த புங்கை மரத்தின் வேருக்கு அதிக மகத்துவம் உண்டு. புங்கம் வேர், மிளகு, திப்பிலி, சீந்தில் இலை, மகிழவேர் இவற்றை சம அளவு எடுத்து
பல் துலங்க புங்கை மரத்தின் குச்சிகளைப் பயன்படுத்தி னார்கள். அந்த புங்கை மரத்தின் வேருக்கு அதிக மகத்துவம் உண்டு. புங்கம் வேர், மிளகு, திப்பிலி, சீந்தில் இலை, மகிழவேர் இவற்றை சம அளவு எடுத்து
மைக்ரோவேவ் அடுப்பு நல்லதா? கெட்டதா?கற்றாழை சாற்றால் அரைத்து சிறு உருண்டையளவு உட்கொள்ள எலி கடியினால் ஏற்படும் விஷம் முறியும்.