ஆட்டு எலும்பு சூப் பல நூற்றாண்டுகளாக பிரபலமான உணவாக இருந்து வருகிறது. அதன் சூப்பரான சுவை, உடல் நலப் பிரச்னைகளை குணப்படுத்தும் பண்பு பெயர் பெற்றது.
காலப்போக்கில், பல கலாசாரங்களில் எலும்பு சூப் ஒரு முக்கிய உணவாக மாறி விட்டது. எலும்பு சூப்பை சாப்பிடுவது நமது ஆரோக்கியத்துக்கு பல நன்மைகளை அளிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொலாஜன், குளுட்டமைன், புரோலின், கிளைசின், காண்ட்ராய்டின் சல்பேட் உள்ளிட்ட மூட்டு மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எலும்பு சூப்பில் நிறைந்துள்ளன.
எலும்பு மற்றும் மூட்டு வலிமையை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும், ஆஸ்டியோ போரோசிஸ், கீல்வாதம் போன்ற நிலைமைகளின் வளர்ச்சியைத் தடுக்கவும் இந்த ஊட்டச்சத்துக்கள் ஒன்றாக வேலை செய்கின்றன.
அசைவ பிரியர்களின் விருப்பப் பட்டியலில் எலும்பு சூப் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். இந்த எலும்பு சூப்பை மழை காலத்தின் மாலையில் குடிக்க அருமையா இருக்கும்.
இந்த சூப்பினை அருந்துவதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் ஹீமோ குளோபினும்👈 அதிகரிக்கும். எலும்பு சூப் செய்வது மிக எளிது. எலும்பு சூப் செய்முறையை பார்க்கலாம்
தேவையானவை :
ஆட்டு எலும்பு - 1/2 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
வெங்காயம் - 1/4
பச்சை 👉மிளகாய் - 2
அரைக்க தேவையானவை :
இஞ்சி - 10 கிராம்,
பூண்டு - 10 கிராம்,
மிளகு தூள் - 2 தேக்கரண்டி,
ரொட்டித்தூள் - சிறிதளவு,
எலுமிச்சம்பழம் - பாதி,
சீரகதூள் - 2 தேக்கரண்டி,
தனியாதூள் - 2 தேக்கரண்டி,
கொத்தமல்லி இலை - 1/2 கட்டு,
நெய் - 50 கிராம்,
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
செய்முறை :
1. தக்காளியை சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். 2. ஒரு அகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
அது பொன்னிற மானதும், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, எலும்பையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
3. பின் மிளகு தூள், சீரகதூள், தனியாதூள், கொத்த மல்லி இலை சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரைச் சேர்த்து மூடி விடவும்.
தேவைக் கேற்ப உப்பு சேர்க்கவும். 1/4 லிட்டர் நீரைச் சுண்ட வைக்கவும். பின் அரைத்த தக்காளி சேர்த்து சூப்பை இறக்கவும்.
பின் சூப்பை வடிகட்டி தூள் செய்த ரொட்டியைத் தூவவும். பின் எலுமிச்சம் பழச்சாறு, சர்க்கரை சேர்க்கவும். உப்பை சரிபார்த்து சூப்பை இறக்கிப் பறிமாறவும்.