மேலை நாட்டு காய்கறி புராக்கோலி !





மேலை நாட்டு காய்கறி புராக்கோலி !

புராக்கோலி என்ற மேலைநாட்டு காய்கறியானது இதய நோய் மற்றும் புற்று நோய்களை குணப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நார்விக்கில் உள்ள உணவு ஆராய்ச்சி 
மேலைநாட்டு காய்கறி புராக்கோலி
மற்றும் ஜான் இன்ஸ் மையத்தினர் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு சூப்பர் புராக்கோலியை கண்டறிந் துள்ளனர்.

இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் அதிகமாக விற்பனை யாகும் புராக்கோலி, அங்கு மிகவும் விலை மலிவான காய்கறியாகும். முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த

ப்ராக்கோலியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகின்றன. எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு ப்ரூக்கோலி முக்கிய பங்காற்றுகிறது.

இதில் உள்ள தாது உப்புக்கள் உயர்ரத்த அழுத்தம், மற்றும் புற்றுநோயை கட்டுப் படுத்துகிறது.
முதுகு வலி ஏற்படுவது எதனால்? எப்படி போக்குவது !
சூப்பர் புராக்கோலி
நார்விக்கில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்ஸ் மையத்தினர் ஆய்வு செய்து ஆரோக்கியத்துக்கு ஊக்கமளிக்கும் `குளூக்கோராபேனின்’ என்ற ஊட்டச்சத்தை மும்மடங்கு கொண்டுள்ள புதிய புராக்கோலியை உருவாக்கி யுள்ளனர்.
புராக்கோலி
இந்த `குளூக்கோராபேனின்’, இதயநோய் மற்றும் குடல், புராஸ்டேட் புற்று நோய்கள் உள்ளிட்ட வற்றுக்கு எதிரான தடுப்பாக அமையும் என்று ஆய்வுகள் உறுதிப் படுத்தியிருக் கின்றன.

முட்டைக்கோஸ் போல தோற்றமளிக்கும் ப்ரக்கோலி உண்மையில் பல ஆரோக்கியம் தரும் நற்பண்புகள் நிறைந்தது. தட்டில் வைக்கப் பட்டிருக்கும் ப்ரக்கோலியைப் பார்த்து நம்மில் பெரும்பாலோர் முகத்தை சுளிக்கிறோம். 

ஆனால் உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய அனைத்து காய்கறிகளையும் விட இது மிகவும் ஆரோக்கியமானது என்பது உங்களுக்குத் தெரியுமா? 

ப்ரக்கோலியில் உங்கள் உடலுக்குத் தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ப்ரக்கோலியில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. 

உடல் எடையை குறைக்க உதவும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதில் உள்ளதால் இது உடல் எடை குறைப்புக்கான சிறந்த காய்கறியாக அமைகிறது. 
இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால், வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை உண்டாக்குகிறது மற்றும் சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் பசியை ஏற்படுத்தாமல் இருக்கிறது. 
விளைவு அதிகமாக சாப்பிடும் பழக்கத்தை தடுக்கிறது. ப்ரக்கோலியில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் C உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்க உதவுகிறது. 

மேம்படுத்தப்பட்ட வளர்சிதை மாற்றம் உடல் அதிக கலோரிகளை அழிக்க உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான உடலை பராமரிக்க உதவுகிறது.

ப்ரக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தவையாக இருக்கிறது. 

சில ஆய்வுகள் அடிப்படையில், ப்ரக்கோலியை சாப்பிடுவது இதய நோய்களின் அபாயத்தை பெருமளவில் குறைக்கிறது. ஏனெனில் இது உடலின் கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
Tags: