ஆட்டிறைச்சியை பொறுத்தவரை, அதன் ஒவ்வொரு உறுப்புகளும், நம்முடைய உடலுக்கு மிகுந்த நன்மையை தரக்கூடியது. அதனால் தான், மட்டனுக்கான மவுசு எப்போதுமே உயர்ந்து காணப்படுகிறது.
உடலுக்கு தீங்கு என்று சொல்லியே, சிலர் ஆட்டுக்கறியை ஒதுக்கி வைத்து விட்டார்கள்.
சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் மட்டும் இந்த ஆட்டுக்கறியை தொடவே கூடாது.
ஆனால், உடல் ஆரோக்கியம் மிக்கவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என யாராக இருந்தாலம், மாதம் ஒருமுறையாவது, குறைந்த அளவில் மட்டன் சாப்பிட்டால், உடலுக்கு வலு கிடைக்கும்.
உடல் சூடு தணியும்.. சருமத்துக்கான பளபளப்பு கூடும்.. பார்வை கோளாறுகள் நீங்கும். ஆட்டுக்கறியை விட, அதன் உறுப்புகளே சத்துக்கள் நிரம்பியவை.. ஆட்டின் கண்களை எடுத்து கொண்டால், நம்முடைய பார்வையை கூர்மைப்படுத்தக் கூடியது.
தேவையானவை :
மட்டன் கலவைக்கு :
1. மட்டன் – 400 கிராம்
2, தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
3. மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
4. மல்லி தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
5. இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
6. உப்பு – 1/2 டீஸ்பூன்
மேற்கூறிய அனைத்தையம் ஒன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
காபாவிற்கு போர்வை போர்த்தி அதை கௌரவப்படுத்திய மன்னன் !
மற்ற தேவையான பொருட்கள் :
1. பாசுமதி அரிசி – 2 கப் (கால் மணி நேரம் ஊற வைத்து, வடித்துக் கொள்ளவும்)
2. நெய் – 1 டேபிள் ஸ்பூன்
3. எண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்
4. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
5. நீளவாக்கில் நறுக்கிய தக்காளி – 1
6. இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
7. மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
8. மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
9. கரம் மசாலா – 1 டீஸ்பூன்
10. தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
11. கொத்த மல்லி மற்றும் புதினா – ஒரு பிடி
நீரிழிவு நோய்க்கு மூக்கிரட்டை சாறு... அதிசயம் அற்புதம் !
தாளிக்க:
1. பட்டை – 1
2. கிராம்பு – 3
3. அன்னாசிபூ- 1
4. பிரியாணி இலை – 1
5. கல்பசி – கொஞ்சம்
செய்முறை:
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் கலந்து ஊற்றவும். தாளிக்க கொடுக்கபட்டுள்ள பொருட்களை 30 முதல் 40 நொடிகள் குக்கரில் தாளிக்கவும்.
இப்பொழுது தனியாக ஒரு வானலி வைத்து அதில் எண்ணெய் உற்றவும். எண்ணெய் சூடான பிறகு, மட்டன் போட்டு 5 நிமிடம் எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.
கொழுப்பு ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்.... தெரிந்து கொள்ளுங்கள் !
இஞ்சி பூண்டு விழுதை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, வெங்காயம் போட்டு வதக்கவும். மிளகாய், மல்லி, கரம் மசாலா பொருட்களை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
இப்பொழுது கொத்தமல்லி மற்றும் புதினா சேர்க்கவும் பிரியாணி வாசனை கூட்டுவதற்காக தயிர் சேர்க்கவும்.
எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும். இக்கலவையை அடி பிடிகாமல் அடிகடி கிளறவும். இப்பொழுது மூன்று முக்கால் கப் தண்ணீர் ஊற்றவும் இக்கலவையை இரண்டு நிமிடம் சமைக்கவும்.
இப்பொழுது தனியாக ஒரு வானலி வைத்து அதில் எண்ணெய் உற்றவும். எண்ணெய் சூடான பிறகு, மட்டன் போட்டு 5 நிமிடம் எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.
இந்த மட்டன் குக்கரில் சேர்க்கவும்.இத்துடன், பாசுமதி அரிசி சேர்த்து 15 நொடிகள் கிளறி குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைத்து இறக்கினால் சுவையான ராயப்பேட்டை பிரியாணி ரெடி.