வாழை மரம். ஒரு பொருள் சற்றும் வீணாகாமல் நம்மால் பயன்படுத்த முடியும் என்றால் அது வாழை மட்டும் தான். வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் என எல்லாமே நிறைவான நன்மைகளை தரக்கூடியவை.
இதன் ஒவ்வொரு பகுதியும் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகளால் நிறைந்துள்ளது. வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் செரிமானம் சீராகும்.
வாழைப்பழங்கள் பொட்டாசியம் மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலம். வாழைப்பூ நீரிழிவு மற்றும் வயதான எதிர்ப்பு குணங்களுக்கு நன்மை செய்கிறது.
வாழைத்தண்டு நார்ச்சத்து அதிகம் நிறைந்தவை இது புண்கள் அல்லது வயிற்றில் அமிலத்துக்கு சிகிச்சை அளிக்க உதவும்.
வாழைப்பழங்கள் போன்று வாழைத் தண்டுகளும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 போன்றவற்றை கொண்டுள்ளது. இது உடலில் ஹீமோ குளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது.
இது தசைகள் சேதமில்லாமல் அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது. வாழைத்தண்டு கூட்டாகவோ. பச்சையாக சாலட் செய்தோ, பொரியலாக்கியோ, எளிதான முறையில் சாறாக்கியோ குடிக்கலாம்.
சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிற வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப் படுகின்றது. சிறுநீரைக் கட்டுப் படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்பு களாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால்
அது பல பிரச்சினை களைத் தோற்றுவிக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம்,
அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.
அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.
சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.
வாழைத் தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத் தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம்.
சிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி?
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படு கிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர் களுக்கு இது மிகச் சிறந்த மருந்து.
இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது. உடலைக் குளிர்ச்சி யடைய வைக்கும் தன்மை யிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது.
வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. உடல் எடை குறைய உணவுக் கட்டுப் பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத் தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.