* இட்லி மாவில் உளுந்து போதாமல் கெட்டியாக இருந்தால் நாலைந்து பச்சை உளுந்து அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து மிக்சியில் ஒரு சுற்றுச் சுற்றி இட்லி மாவில் கலக்க வேண்டும். இட்லி பூ போல இருக்கும்!
* குதிரைவாலி அரிசியை கொதிக்க வைத்து பூண்டு, வெந்தயம், பாசிப்பருப்பு, சிறிது உப்பு மற்றும் மோர் விட்டு குடித்தால் சர்க்கரை நோய்க்கு நல்லது. சுவையாகவும் இருக்கும்!
* சுண்டைக்காய் அதிகமாக கிடைக்கும் நேரங்களில் சுண்டைக்காயை நன்றாக எண்ணெயில் வதக்கி உப்பு,
மிளகாய்ப் பொடி, பெருங்காயப் பொடி தூவி எலுமிச்சைச்சாறு பிழிந்து கடுகு தாளித்து கொட்டினால் ஊறுகாய் ரெடி!
மிளகாய்ப் பொடி, பெருங்காயப் பொடி தூவி எலுமிச்சைச்சாறு பிழிந்து கடுகு தாளித்து கொட்டினால் ஊறுகாய் ரெடி!
* சூப், கிரேவி போன்றவற்றில் போடுவதற்கு க்ரீம் கைவசம் இல்லையா? சிறிதளவு வெண்ணையில் கொஞ்சம் பால் கலந்து
நன்கு கலக்கிய பின், க்ரீமுக்குப் பதிலாக உபயோகிக்க லாம். வித்தியாசம் கண்டு பிடிக்கவே முடியாது!
நன்கு கலக்கிய பின், க்ரீமுக்குப் பதிலாக உபயோகிக்க லாம். வித்தியாசம் கண்டு பிடிக்கவே முடியாது!
* தேங்காய்ப் பால் எடுப்பதற்கு மிக்சியில் தேங்காயுடன் வெதுவெதுப் பான பால் விட்டு அரைத்தால் திக்கான பால் கிடைக்கும்.
* தனியா, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், வெந்தயம், பச்சரிசி, கறிவேப்பிலை எல்லா வற்றையும் வாசனை வரும் வரை வறுத்து,
மிக்சியில் தூள் செய்து சாம்பாரில் போட வாசனை யாகவும் திக்காகவும் இருக்கும்.
மிக்சியில் தூள் செய்து சாம்பாரில் போட வாசனை யாகவும் திக்காகவும் இருக்கும்.
* பூசணிக்காய் கூட்டு செய்யும் போது வேர்க் கடலையை வறுத்து பொடி செய்து சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
* ஆறிப்போன பஜ்ஜி போண்டாக்களை சிறுசிறு துண்டுகளாக்கி மஞ்சூரியனுக்குச் செய்வது போல வெங்காயம்,
பூண்டு, தக்காளி சாஸ் சேர்த்து வதக்கி துண்டுகளையும் சேர்த்துப் புரட்டிப் பரிமாறினால் சூப்பர் டேஸ்ட்டில் புதுவகை சாட் ரெடி!
பூண்டு, தக்காளி சாஸ் சேர்த்து வதக்கி துண்டுகளையும் சேர்த்துப் புரட்டிப் பரிமாறினால் சூப்பர் டேஸ்ட்டில் புதுவகை சாட் ரெடி!
* உருளைக் கிழங்கு பொரியல் செய்யும் போது, இஞ்சியை அரைத்து சேர்த்துக் கொண்டால் வாய்வு தொந்தரவு நீங்கும்.
* உப்புமா, கலவை சாத வகைகள், வெண்பொங்கல் முதலியவற்றைப் பரிமாறும் போது மேலே ஓமப்பொடி,
காராபூந்தி, மிக்ஸர் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைத் தூவினால் கரகரப்பும் சுவையும் கூடுதலாக இருக்கும்.
காராபூந்தி, மிக்ஸர் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைத் தூவினால் கரகரப்பும் சுவையும் கூடுதலாக இருக்கும்.