சுவையான ஆலு போஹா செய்வது எப்படி?





சுவையான ஆலு போஹா செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயு ஏற்படும், உடல் எடை அதிகரிக்கும் என்றெல்லாம் கூறப்படுகிறது. இதில், சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை சாப்பிடக் கூடாது என்றும் சொல்லப் படுவதுண்டு. 
சுவையான ஆலு போஹா செய்வது எப்படி?
ஆனால், உருளைக்கிழங்கை அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே வாயு, உடல் எடை அதிகரிப்பு எல்லாம் ஏற்படும். உருளைக்கிழங்கில் கார்போ ஹைட்ரேட் அதிகமாகவும் புரதம் குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கிறது என்பது உண்மை தான். 
ஆனால், உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் உருளைக்கிழங்கில் நிறைந்து காணப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய வைட்டமின் சி, உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. 

அது போல, பொட்டாசியமும் அதிகம் உள்ளது. இந்த பொட்டாசியம் உண்மையில் இதய நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் தேவையான சத்தாகும். 

ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர பொட்டாசியம் உதவுகிறது. 

இதயம் ஆரோக்கியமாக இயங்கவும், இதய நோய்கள் வராமல் தடுக்கவும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை உருளைக்கிழங்கு சாப்பிடுவது நன்மையை ஏற்படுத்தும்.

வீட்டில் ஆண்கள் ஓதுக்கப்படுகிறார்களா?

தேவையான பொருள்கள் : .

அவல் - 2 கப் (20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து பிழிந்தெடுக்கவும்),

கடுகு - 1 டீஸ்பூன்,

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

கிராம்பு - 2,

பட்டை - 2,

நறுக்கிய பச்சை மிளகாய் - 3,

பெரிய வெங்காயம் - 1/2 கப்,

கொத்த மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்,

கறிவேப்பிலை - சிறிது,

மஞ்சள் தூள் - 3/4 டீஸ்பூன்,

வேக வைத்த உருளைக்கிழங்கு - 1 கப் (உரித்து சதுர வில்லைகளாக வெட்டியது),

வேக வைத்த பச்சைப் பட்டாணி - 1/2 கப்,

உப்பு - தேவைக்கு,

சர்க்கரை - 1 டீஸ்பூன்,

தேங்காய்த் துருவல் - 3/4 கப்,

எலுமிச்சைச் சாறு - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை : .
எண்ணெயை சூடாக்கி கடுகு, பட்டை, கிராம்பு, சேர்த்து வெடிக்க விடவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கவும். 

மஞ்சள் தூள், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, தண்ணீர் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். 

அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

அவல், உப்பு, சர்க்கரை, எலுமிச்சை சாறு, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாக கிளறி, கொத்த மல்லித் தழை தூவி சூடாக பரிமாறவும்.
Tags: