ஆண்களும், பெண்களும் உடலளவில் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே திருமணத்திற்கு பின்பு ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கி நல்ல குழந்தைப்பேறு ஏற்படும். மாம்பலத்தில் உடலுக்கு தேவையான பல விட்டமின்கள், தாது சத்துகள் உள்ளதால் அதை சாப்பிடுபவர்களுக்கு உடல்சக்தி கிடைக்கும்.
மாம்பலத்தில் கிருமிகளை அழிக்கும் சிறந்த இயற்கை ரசாயனங்கள் உள்ளன. இதை அடிக்கடி சாப்பிடுவதால் ஜீரண உறுப்புக்கள் நன்றாக இருக்கும்.
மாம்பழத்தை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் நன்கு வலுப்பெறும் நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் நீங்கும். இதில் மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது.
வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி-யும் அதிகம் உள்ளது. பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் காப்பர் போன்ற கனிமங்களும் இதில் வளமாகக் காணப்படுகிறது.
சரி இனி மாம்பழம் கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த மாம்பழ அல்வா செய்வது எப்படி?என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மாம்பழ கூழ் - 1 கப்
சர்க்கரை - 1/4 கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 6
செய்முறை :
முதலில் நன்கு கனிந்த மாம்பழத்தின் தசைப் பகுதியை மட்டும் எடுத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து, மாம்பழ கூழ் தயாரித்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மாம்பழ கூழை சேர்த்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்னர் அதில் சர்க்கரையை சேர்த்து குறைவான தீயில் வைத்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
சர்க்கரை கரைந்து நீர் போன்று ஆனதும், கலவையானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும். கலவை கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் 1 டீஸ்பூன் நெய்யை அவ்வப்போது சிறிது விட்டு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
ஒரு கட்டத்தில் கவையானது பந்து போன்று ஒன்று திரண்டு வரும் போது, அதில் மீதமுள்ள நெய்யை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இக்கட்டத்தில் கலவையானது அல்வா பதத்திற்கு வந்திருப்பதைக் காணலாம்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும், முந்திரி பருப்புக்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதை மாம்பழ அல்வாவுடன் சேர்த்து கிளறினால், சுவையான மாம்பழ அல்வா தயார்.
குறிப்பு:
மாம்பழக் கூழ் கலவையானது அல்வா பதத்திற்கு வர குறைந்தது 20 நிமிடங்கள் ஆகும். அல்வா சூடாக இருக்கும் போது பந்து போல ஆடும். ஆனால் குளிர்ந்ததும் கெட்டியாகி விடும்.