ஆப்பிள் ஜிலேபி செய்வது | Apple jilepi !





ஆப்பிள் ஜிலேபி செய்வது | Apple jilepi !

தேவையான பொருள்கள் : -

ஆப்பிள் - 2 (தோல் சீவி நடு விதை பாகம் எடுத்து 1/4 இன்ச் வட்டங்களாக நறுக்கி தண்ணீரில் வைக்கவும்), 

எண்ணெய் - பொரிக்க.

மாவிற்கு...

மைதா மாவு - 1 கப்,

சர்க்கரை - 1 டீஸ்பூன்,

உருக்கிய நெய் - 1 டேபிள்ஸ்பூன்,

பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,

மிதமான சூட்டில் தண்ணீர் - தேவைக்கு.

சர்க்கரைப் பாகிற்கு...

சர்க்கரை - 1 கப்,

தண்ணீர் - 3/4 கப்,

குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்,

ரோஜா பன்னீர் - 2 டீஸ்பூன்,

பால் - 1 டேபிள்ஸ்பூன்.

அலங்கரிக்க...

நறுக்கிய பிஸ்தா, பாதாம் - தேவைக்கு,

ரோஜா இதழ் - சிறிது. 

செய்முறை : -
ஆப்பிள் ஜிலேபி
விற்கு கொடுத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து 15 நிமிடங்கள் ஊற விடவும். மாவை பஜ்ஜி மாவு பக்குவத்திற்கு கலக்கவும். 

பாகிற்கு சர்க்கரையும், தண்ணீரையும் சேர்த்து ஒரு கம்பி பதம் அளவிற்கு வரும் வரை கொதிக்க விட்டு, பால், குங்குமப்பூ, பன்னீர் சேர்த்து கலக்கி அடுப்பை விட்டு இறக்கி வைக்கவும். 

எண்ணெயை சூடாக்கி பின், ஆப்பிள் வட்டங்களை மாவில் தோய்த்து பொன்னிறமாக முறுவலாக வறுத்தெடுக்கவும். பாகில் முக்கி எடுத்து, அதன்மேல் பாதாம், பிஸ்தா, ரோஜா இதழ் தூவி உடனே பரிமாறவும்.
Tags: