பாதுஷா செய்முறை / badusha !





பாதுஷா செய்முறை / badusha !

தேவையான பொருட்கள்:

மைதா - 2 டம்ளர்

உப்பு - சிறிதளவு

வெண்ணெய் - 100 கிராம்

ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை

பேக்கிங் பவுடர் - 1 தே‌க்கர‌ண்டி

சர்க்கரை - 4 டம்ளர்

செய்முறை:
மைதாவுடன் வெண்ணெய், உப்பு, ஆப்பசோடா, பேக்கிங் பவுடர் அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து வரும்படி கலந்து பிறகு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்.

ஒரு மணி நேரம் நன்கு ஊற வைத்து பிறகு மா‌வினை நமது ‌‌விர‌ல் தடிமனு‌க்கு ‌நீ‌ண்ட க‌யிறு போ‌ல் செ‌ய்வு‌ம். அதனை ‌பாதுஷா அள‌வி‌ற்கு சு‌ற்றவு‌ம். ‌மீத பாக‌த்தை வெ‌ட்டி‌விடவு‌ம்.
பாதுஷா
"> பி‌ன்ன‌ர் சு‌ற்‌றிய மா‌வி‌ன் மைய‌ப் பகு‌தி‌யி‌ல் ‌விர‌ல்களை வை‌த்து அமு‌க்‌கினா‌ல் பாதுஷா உருவ‌ம் ‌கிடை‌த்து ‌விடு‌ம். இ‌வ்வாறே அனை‌‌த்து மா‌வினையு‌ம் செ‌ய்து கொ‌ள்ளவு‌ம். அதிக கனமாக இல்லாதவாறு பார்த்து கொள்ளவேண்டும்.

பிறகு கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பாதுஷா‌ உருண்டைகளை போ‌ட்டு பொ‌ரி‌க்கவு‌ம். இரு பக்கமும் நன்கு வெந்து பொன் நிறம் வந்ததும் எடு‌க்க‌வு‌ம்.
அதே சமய‌ம் ம‌ற்றொரு அடு‌ப்‌பி‌ல் ‌ஜீரா செ‌ய்து கொ‌ள்ளவு‌ம். ஜீரா செய்ய 5 டம்ளர் தண்ணீர் வைத்து காய்ந்ததும் சர்க்கரையைப் போட்டு பாகு பதம் வருவதற்கு முன்பே இறக்கி ஆற வைத்து‌க் கொ‌ள்ளவு‌ம். 

பொ‌ரி‌த்த பாதுஷா‌க்களை ‌ஜீரா‌வி‌ல் போட்டு ஊற வைக்க வேண்டும். ஒரு நா‌ள் முழுது‌ம் ஊ‌றினா‌ல் சூப்பரான பாதுஷா தயாராகிவிடும். அல‌ங்க‌ரி‌க்க :

தே‌ங்கா‌யை ‌மிக மெ‌‌ல்‌லியதாக துரு‌‌வி அ‌தி‌ல் கேச‌ரி‌ப் பவுடரை‌க் கல‌ந்து பாதுஷா‌வி‌ன் ‌மீது தூ‌வி அல‌ங்க‌ரி‌க்கலா‌ம். ‌பி‌ஸ்தா பரு‌ப்பையு‌ம் ‌சி‌றியதாக நறு‌க்‌கி தூவலா‌ம்.
Tags: