சுவையான பீஃப் கறி செய்வது எப்படி?





சுவையான பீஃப் கறி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
பீஃப் – 1 கிலோ

வெங்காயம் – 3


உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – 2 கொத்து

இஞ்சி விழுது – 11/2 மேஜைக் கரண்டி

பூண்டு விழுது - 11/2 மேஜைக் கரண்டி

நல்ல மிளகு தூள் – ½ தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 மேஜைக் கரண்டி

மஞ்சள்தூள் - ½ தேக்கரண்டி

கரமசாலா தூள் – 1 தேக்கரண்டி

சோம்பு தூள் – 1 தேக்கரண்டி

வினிகர் – 3 தேக்கரண்டி

நீர் – 1 ½ கப்

மல்லித்தளை – தேவைப் பட்டால்

செய்முறை

பீஃப் கறி செய்வது
பான் அல்லது பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து பொன்னிற மாகும் வரை வதக்கவும்.

பின்பு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, நல்ல மிளகு தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் சோம்பு தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

அதற்கு பின் பீஃப், வினிகர், நீா் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி பீஃப் வேகும் வரை வைக்கவும்.

(பிரஸர் குக்கர் எண்றால் 4-5 விசில் வரும்வரை வேக வைக்கவும்).

பின்பு மல்லித் தளை சேர்த்து கிரேவி சிறிது கெட்டி யாகும் வரை வைத்து பின்பு இறக்கவும்.. பீஃப் கறி ரெடி
Tags: