பீட்ரூட் அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டிய ஒரு சூப்பர் ஃபுட் என நிபுணர் குறிப்பிட்டுள்ளார். இதை பொரியல், ஜூஸ், சாலட் போன்ற பல்வேறு விதங்களில் எடுத்துக் கொள்ளலாம்.
இதில் உள்ள பல வகையான வைட்டமின்கள், உடலை நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கின்றன. மேலும் இதில் சோடியம், பொட்டாசியம் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச் சத்துக்களும் நிறைந்துள்ளன.
தினமும் ஒரு பீட்ரூட் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, வயிறு மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது.
பீட்ரூட்டில் ஏராளமான வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். பீட்ரூட்டை தினமும் சாப்பிட்டு வர உடல் வலிமை அதிகரிக்கும்.
இது உங்களை நீண்ட நேரத்திற்கு சோர்வடையாமல் வைத்திருக்கும். பீட்ரூட் சூப்பை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சாப்பிடலாம்.
இவற்றை முக்கிய நிகழ்வுகளின் போதும், வீட்டு விஷேசங்களின் போதும் விருந்தினர்களுக்கு கொடுக்கலாம். பீட்ரூட்டை நமது உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும். இப்படியாக ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும், இயற்கையான சுவையையும் கொண்ட இந்த சூப் ரெசிபியை எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் : -
துருவிய பீட்ரூட் - 3/4 கப்,
கேரட் - 1/2 கப்,
லேசாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1/2 கப்,
உருளைக்கிழங்கு - 1/2 கப்,
முட்டைகோஸ் - 3/4 கப்,
தக்காளி - 1/2 கப்,
மல்லித்தழை - 4 டீஸ்பூன்,
வெஜிடபிள் சூப் ஸ்டாக் கியூப் - 1,
ஆரஞ்சு ஜூஸ் - 2 பழத்தில் எடுத்தது,
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்,
உப்பு, மிளகு - தேவைக்கு,
தண்ணீர் - 3 கப்,
கெட்டித் தயிர் - 2 டேபிள்ஸ்பூன்.
மஞ்சள் காமாலை வந்தால் என்ன செய்யலாம்?
செய்முறை : -
எண்ணெயை சூடாக்கி வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பீட்ரூட், உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், தக்காளி சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.
தண்ணீர் மற்றும் வெஜிடபிள் ஸ்டாக் கியூப் சேர்த்து 7 நிமிடங்கள் வேக விடவும். ஆரஞ்சு ஜூஸ், மிளகு, உப்பு சேர்த்து, மேலே கெட்டித் தயிர், மல்லித்தழை தூவி பிரெட்டுடன் சூடாக பரிமாறவும்.