பிஸ்கெட் லேயர் புட்டிங் செய்வது | biscuit layer futting !





பிஸ்கெட் லேயர் புட்டிங் செய்வது | biscuit layer futting !

தேவையான பொருள்கள் : -

மாரி பிஸ்கெட் - 1 பாக்கெட் (பொடித்தது),

ஃப்ரெஷ் கிரீம் - 100 கிராம்,

வெண்ணெய் - 100 கிராம்,

பொடித்த முந்திரிப்பருப்பு - 100 கிராம்,

சர்க்கரைப்பாகு - 1 கப்,

வெனிலா எசென்ஸ் - 1/4 டீஸ்பூன்,
சர்க்கரை - 20 கிராம்,

பழங்கள் (மாம்பழம், வாழைப்பழம், ஆப்பிள்) - 1 கப் (நறுக்கியது),

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 1 கப்.

செய்முறை : -

முதல் அடுக்கு 2 டீஸ்பூன் வெண்ணெயை உருக்கவும். பொடித்த பிஸ்கெட்டை 3 சரிபாகமாக பிரித்து வைக்கவும். 
பிஸ்கெட் லேயர் புட்டிங்

ஒரு பாகம் பிஸ்கெட்டுடன், சர்க்கரைப்பாகும் தேவை என்றால் சர்க்கரையையும் சேர்த்து கலக்கவும். புட்டிங் பாத்திரத்தின் அடிபாகத்தில் இதை சரிசமமாக பரப்பி விடவும். 

முந்திரிப்பருப்பு பொடி 1 டேபிள்ஸ்பூன், தேவைக்கேற்ப சர்க்கரையுடன் கலந்து மேலே தூவவும். அதன் மேல் சிறிது நறுக்கிய பழங்களும், பேரீச்சம் பழமும் தூவவும்.

இரண்டாம் அடுக்கு வெண்ணெய் 2 டீஸ்பூன் உருகவும். அதனுடன் ஒரு பாகம் பிஸ்கெட் பொடி, தேவைக்கேற்ப சர்க்கரை மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும். சரிசமமாக முதல் அடுக்கின் மேல் பரப்பி விடவும். 
பருப்பு பொடி 2 டேபிள்ஸ்பூன், தேவைக்கேற்ப சர்க்கரையுடன் கலந்து அதன் மேல் தூவவும். நறுக்கிய பழங்கள் சிறிது மற்றும் பேரீச்சம் பழங்களை மேலே தூவி விடவும்.

மூன்றாவது அடுக்கு ஃப்ரெஷ் கிரீம், வெனிலா எசென்ஸ், சர்க்கரை தேவைக்கேற்ப, மீதம் உள்ள பிஸ்கெட் பொடி ஒன்றாக சேர்த்து கலக்கவும். 

அதை சரிசமமாக இரண்டாம் அடுக்கின் மேல் பரப்பி விடவும். முந்திரிப்பருப்பு பொடியுடன், தேவைக்கேற்ப சர்க்கரையை கலக்கி மேலே தூவி விடவும். 

நறுக்கிய பழங்களையும், பேரீச்சம் பழத்தையும் தூவி விடவும். அதன் மேல் முந்திரி பருப்பு பொடியை தூவி விடவும். புட்டிங் ரெடி. ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.
Tags: