உப்பு போன்ற சுவையை கொண்ட அஜினோமோட்டோவை சீனர்கள் உணவுகளின் சுவைக்காக சேர்க்கின்றனர். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக பார்க்கும் போது அஜினோமோட்டோ சோடியம் மற்றும் குளுட்டமிக் அமிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் கலவையாகும்.
சீனர்கள் பயன்படுத்தி வந்த இந்த அஜினோமோட்டோ அவர்கள் உணவுகளான நூடுல்ஸ், சூப், ஃப்ரைட் ரைஸ் போன்ற உணவுகள் மூலம் ஆசிய கண்டம் முழுவதும் பரவி உள்ளது.
பிரபல ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி அஜினோமோட்டோவில் 12,300 மி.கி சோடியம், 21.2 மி.கி கால்சியம் மற்றும் 0.4 மி.கி இரும்பு சத்தை கொண்டுள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள், புரதங்கள், கொழுப்புகள் போன்றவை இல்லை.
அஜினோமோட்டோவை பொறுத்தவரை அதை குறைந்த அளவில் பயன்படுத்தும் போது பெரிதாக பாதிப்பு ஏற்படுவதில்லை.
ஆனால் அதிகப்படியான அஜினோமோட்டோ பயன்பாடானது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். உண்மையில் இதில் உள்ள குளுட்டமிக் அமிலமானது மூளையில் நரம்பு கடத்தியாக செயல்படுகிறது.
அஜினோமோட்டோவை அதிகமாக எடுத்துக் கொள்வது உடலில் வியர்வை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. இது சோர்விற்கு வழி வகுக்கிறது.
உடலில் அதிக அளவு சோடியம் இருப்பதால் அது மூட்டு மற்றும் தசை வலிக்கு வழி வகுக்கும். மேலும் இது சிலருக்கு வயிற்றில் எரியும் உணர்வை ஏற்படுத்தும்.
இது குடலில் அமிலத் தன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இதனால் ஒட்டு மொத்த செரிமான அமைப்பிலும் பிரச்சனை ஏற்படுகிறது.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 100 கிராம்
முட்டை - 2
கொத்திய எலும்பு நீக்கிய கறி - 100 கிராம்
சோயா சாஸ் - 1/4 ஸ்பூன்
அஜினோமோட்டோ - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கோதுமை மாவில் முட்டை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவுக்கு பிசைவது போல் பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
கடாயில் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சிக்கன் கொத்திய கறியை போட்டு பாதியளவு வெந்ததும் அதில் அஜினோ மோடா, சோயா சாஸ், உப்பு சேர்த்து கலந்து ஆற வைக்கவும்.
மாவை சப்பாத்திகளாக உருட்டி சதுர வடிவில் வெட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு சப்பாத்தி சதுரத்தின் மீதும் கொஞ்சம் கோழிக்கறி கலவையை வைத்து நீள வடிவில் உருட்டி வைக்கவும்.
அனைத்தையும் இவ்வாறு செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள சிக்கன் ஸ்டஃப் ரோல்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான சிக்கன் ஸ்டஃப் ரோல் ரெடி.