சுவையான கடலை மாவு கார பர்பி செய்வது எப்படி?





சுவையான கடலை மாவு கார பர்பி செய்வது எப்படி?

நம்முடைய உலர்ந்த தோல் பொலிவு பெற அதில் க்ரீம் சேர்த்து முகத்தில் அப்ளே செய்து வரலாம். இது உங்க சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து பொலிவூட்டும். சருமத்தில் உள்ள கருமையை போக்கி சிவப்பாக்கும் என அவர் கூறியுள்ளார். 
சுவையான கடலை மாவு கார பர்பி செய்வது எப்படி?
பாலுடன் சேர்த்து குழைத்து குளிப்பதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பு முகம் மற்றும் கை, கால்களில் அப்ளை செய்து உலர விட்டுப் பின் குளித்து வாருங்கள். ஒரே வாரத்தில் உங்களுக்குத் தெரியும் எப்படி ஜொலிக்கிறீர்கள் என்று. 
கடலை மாவு முகப்பரு பிரச்சனைகளை களைய உதவுகிறது. இதற்கு நீங்கள் தேயிலை மர எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை நீங்கள் பயன்படுத்தி வந்தால் பருக்கள் குறைய ஆரம்பித்து விடும்.

கடலை மாவைக் கொண்டு முகத்தை தேய்த்து கழுவினால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சருமம் பளிச்சென்று மின்னும். கடலை மாவில் முகத்தை ப்ளீச்சிங் செய்யும் தன்மை உள்ளது. 

எனவே அதைக் கொண்டு முகத்தை கழுவி வர சருமத்தின் நிறம் அதிகரிக்கும். கடலை மாவைக் கொண்டு பேஸ்பேக் போட்டு வரும் போது கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் போய் விடும்.

தேவையான பொருள்கள் : 

கடலை மாவு - 200 கிராம், 

நறுக்கிய முந்திரிப் பருப்பு - 30, 

பச்சை மிளகாய் - 1, 

கொத்த மல்லித்தழை - 4 டேபிள் ஸ்பூன், 

தண்ணீர் - 300 மி.லி., 

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், 

புளி கரைசல் - 1 டீஸ்பூன், 

உப்பு - தேவைக்கு, 

சர்க்கரை - 1/2 டீஸ்பூன், 

எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன் + பொரிக்க 200 மி.லி.
செய்முறை : -
கடலை மாவு கார பர்பி
கடலை மாவு, முந்திரிப் பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய், புளிக்கரைசல், கொத்த மல்லித்தழை, உப்பு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும். 

5 டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி கடலை மாவு கலவையை ஊற்றி 15 நிமிடங்கள் இடைவிடாமல் கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைத்து இறக்கவும்.

குழித்தட்டில் 1 டீஸ்பூன் எண்ணெய் தடவி கடலை மாவு கலவையை ஊற்றி சரிசமமாக பரத்தி விடவும். ஆற விட்டு சதுரங்களாக நறுக்கவும். 
பொரித்தெடுக்க எண்ணெயை சூடாக்கி பர்பியை பொன்னிறமாக பொரித்தெடுத்து, தேங்காய் இல்லாத பச்சை சட்னி, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
Tags: