தேவையான பொருள்கள் : -
தேங்காய் துருவல் - ஒரு கப்,
உருளைக் கிழங்கு - 3,
பச்சை மிளகாய் - 4,
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி - ஒரு துண்டு,
பிரெட் தூள் - கால் கப்,
டெஸிகேட்டட் தேங்காய் துருவல் (எல்லா டிபார்ட் மென்ட்டல் ஸ்டோர் களிலும் கிடைக்கும்) - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :-
உருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும். பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
தேங்காய் துருவலுடன், உருளைக் கிழங்கு, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும். சோள மாவை தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
பிசைந்த கலவையை விரும்பிய வடிவில் கட்லெட்டு களாக செய்து கொள்ளவும். பிறகு,
சோளமாவு கரைசலில் அமிழ்த்தி எடுத்து, பிரெட் தூள், டெஸிகேட்டட் தேங்காய் துருவலில் புரட்டி, தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.