தேங்காய் சதையில் உயர்ந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் காணப்படுகிறது. இதில் மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன.
ஒரு ஆரோக்கியமான உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் காணப்படுகிறது. இதில் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளன.
இந்த கரையாத நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
இந்த சதைப் பகுதியை நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்க இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு நீங்கள் ஏராளமான நன்மைகளை பெற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அளவோடு தேங்காயை எடுத்து வருவது ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஒரு சிறந்த வழியாக அமையும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
சரி, இனி தேங்காய் கொண்டு சுவையான தேங்காய் லட்டு செய்வது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உலர்ந்த வறுத்த தேங்காய் துருவல் - 2 கப்
இனிப்பான சுண்டக் காய்ச்சிய பால் (மில்க்மைடு) - 200 கிராம்
நறுக்கிய பாதாம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து சூடான பிறகு சுண்டக் காய்ச்சிய பாலை (மில்க்மைடு ஊற்றி உடனே வறுத்த தேங்காய் துருவலையும் போட்டு கலக்க வேண்டும்.
நன்றாக கலந்து கொண்டே கலவையானது கெட்டியான பதத்திற்கு வரும் வரை நன்றாக கிளர வேண்டும். கடாயில் ஒட்ட விடாமல் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
நன்றாக உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்ததும் ஏலக்காய் பொடி மற்றும் நறுக்கிய பாதாம் பருப்புகளை போட்டு கிளற வேண்டும். இப்பொழுது இந்த தேங்காய் கலவையை நல்லா வட்ட வடிவ பந்து மாதிரி உருட்ட வேண்டும்.
இந்த பந்தை உலர்ந்த தேங்காய் துருவலில் எல்லா பக்கங்களிலும் படும்படி பிரட்டி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு பாதாம் பருப்பை மேல் தூவி அலங்கரிக்க வேண்டும்.