அருமையான தினை சீரக தோசை செய்வது எப்படி?





அருமையான தினை சீரக தோசை செய்வது எப்படி?

சீரக விதைகள், வாயு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்க உதவுகின்றன. அதே நிலையில், இந்த விதைகள் செரிமான பிரச்சினைகளுக்கு காரணமாகவும் அமைந்து விடுகின்றன. 
அருமையான தினை சீரக தோசை செய்வது எப்படி?
அது மட்டுமல்லாது, இரைப்பை பகுதியில் அதிக வாயு வெளியேற்றத்திற்கு காரணமாகி, நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. 

சீரக விதைகளில் உள்ள அதிகப்படியான கார்மினேட்டிவ் விளைவு, ஏப்பங்களை அதிகளவில் ஏற்படுத்த காரணமாக அமைகின்றன. 
நமது உடலின் குடல் மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அதிகப்படியான வாயு மற்றும் வீக்கம், வாய் வழியாக வெளியேறும் நிகழ்வையே நாம் ஏப்பம் என்று சொல்கிறோம். 

இந்த ஏப்பம், சிலருக்கு துர்நாற்றம் கொண்டதாகவும், சில தனிப்பட்ட சத்தங்களை கொண்டதாகவும் இருக்கும். ஏப்பம் விடுவது பெரிய பிரச்சினை அல்ல என்றபோதிலும், சில நேரங்களில் நம்மை அதிக சங்கடத்திற்கு உள்ளாக்கி விடும் என்பதை மறுக்க இயலாது.

சீரக விதைகளை நாம் அதிகளவில் நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அதில் உள்ள எளிதில் ஆவியாகும் தன்மை கொண்ட எண்ணெய், நமது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. 
சீரகத்தை உணவில் குறைந்த அளவிலேயே பயன்படுத்த அறிவுறுத்தப் படுகிறார்கள்.

தேவையான பொருட்கள் :

தினை - ஒரு கப்

அரிசி மாவு - கால் கப்

தயிர் - ஒரு கப்

தண்ணீர் - 2 கப்

மிளகு தூள் - 1 மேசைக் கரண்டி

பச்சை மிளகாய் - 2

சீரகம் - அரை தேக்கரண்டி

இஞ்சி - 1 துண்டு

வெங்காயம் - 2

தாளிக்க :

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மிளகாய் வற்றல் - 2

செய்முறை :

இஞ்சி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். தினை அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். 
அருமையான தினை சீரக தோசை செய்வது எப்படி?
ஒரு அகண்ட பாத்திரத் தில் பொடி பண்ணிய தினை ரவா, அரிசி மாவு, தயிர், தண்ணீர் தேவையான உப்பு சேர்த்து ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும். 

வேண்டு மென்றால் தண்ணீர் சேர்த்துக் கொள்ள லாம். கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சை யாக சேர்த்து அதனுடன், மிளகு தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி,

பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும். கலந்த மாவை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தாளிக்க வேண்டிய வைகளை தாளித்து அதனுடன் சேர்க்க வேண்டும்.
கருத்தரிக்க முடியாமல் போக காரணம்? கருத்தரிக்க உதவும் உணவுகள் !
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி 

இரு புறமும் எண்ணெண் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும். இதற்கு தொட்டு கொள்ள தக்காளி சட்னி, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.
Tags: