பெரும்பாலான மக்கள் சிக்கனை பயன்படுத்தினாலும், ஆட்டிறைச்சிக்கு தனி சுவை இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், ஆட்டிறைச்சி உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது போல பல்வேறு செய்திகள் வெளியாகி, மட்டன் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இதன் விளைவாக, மட்டன் பிரியர்கள் சிக்கனுக்கு மாறி வருகிறார்கள். சிலர் ஆட்டிறைச்சியில் எந்த தீங்கும் கிடையாது என்றும் கூறி வருகின்றனர். ஒரு மட்டனில் சிக்கனை விட குறைவான கலோரிகள், கொழுப்புகள் உள்ளன.
ஆனால், அதிக புரதம் உள்ளது. மட்டனில் இரும்பு மற்றும் பொட்டாசியம் ஊட்டசத்துகள் அதிகம் உள்ளன. சிக்கனை விட குறைவான சோடியம் ஊட்டசத்து உள்ளது.
கோழி இறைச்சியில் சில பகுதிகள் மட்டுமே உடலுக்கு நல்லது. பல பகுதிகளில் கொழுப்பு மட்டுமே உள்ளது. அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
அதாவது, கால்கள், இறக்கைகள், தொடைகள், மார்பகப் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் கொழுப்புகள் அதிகம். எப்போதும் மார்பகப் பகுதியைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
ஆட்டிறைச்சி சாப்பிட்டால் பசி எடுக்காது என்று சொல்வது தவறானது. இருப்பினும் அதிகப்படியான அளவில் சாப்பிடும் போது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனத் தெரிவித்தார். கோழி இறைச்சியிலும் தீங்கு கிடையாது, மார்பகப் பகுதிகளை சாப்பிடுவது நல்லது.
தேவையானபொருள்கள் :
ஆட்டு எலும்பு - 1/2 கிலோ
கத்தரிக்காய் - 150 கிராம்
துவரம் பருப்பு – 100 கிராம்
உருளைக்கிழங்கு - 150 கிராம்
முருங்கை காய் - 2
தக்காளி - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் – 10
வத்தல் மிளகாய் - 10
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பட்டை - 4
பிரியாணி இலை – 1
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
நோயை உண்டாக்கும் மெழுகு குலையாத பழங்கள் !
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் ஆட்டு எலும்பு, துவரம் பருப்பு, இரண்டையும் மஞ்சள் தூள், சிறிது உப்பு, மற்றும் 5 டம்ளர் தண்ணிர் சேர்த்து வேக வைக்கவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடாய் சூடானதும் சீரகம், சோம்பு, பட்டை, பிரியாணி இலை, பச்சை மிளகாய், வரமிளகாய் என அனைத்தையும் ஒவ்வென்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் இரண்டு வெங்காயம், தக்காளியையும் சேர்த்து வதக்கவும். அதனுடன் கத்திரிக்காய், முருங்கைக்காய், உருளை கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்,
காய் நன்றாக வதங்கியதும் கலவையுடன் வேக வைத்த ஆட்டு எலும்புகளைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும நன்றாக வெந்ததும் கொத்த மல்லி தழை தூவி இறக்கவும்.
இப்போது சுவையான துவரம் பருப்பு ஆட்டு எலும்பு ரசம் ரெடி!