வெந்தயம் என்பது மெத்தி என்ற பெயரில் இந்தியாவில் அழைக்கப்படுகிறது. அதன் விதைகள் மற்றும் அதன் இலைகள் நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக உள்ளது.
நமது உடம்பை குளிர்ச்சியாக வைப்பதற்கு வெந்தயம் மிகவும் உதவி புரிகிறது. இது எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ற படி வளரும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை செடியாகும்.
வெந்தய கீரை புதிய பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. பிரசவ வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது.
மேலும் வயிற்றில் ஏற்படும் அலர்ஜி, குடல் அலர்ஜி குடல் அல்சர் போன்றவற்றை தடுப்பதோடு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.
வெந்தயக்கீரை சீரண சக்தியைச் செம்மைப் படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக் கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர்.
இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன.
மலம் கழிக்கும் போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக் கீரை குணப்படுத்துகின்றது.
தேவையான பொருள்கள் : .
கோதுமை மாவு - 2 கப்,
வெந்தயக்கீரை - 1 கப் (இலை மட்டும்),
தட்டிய சின்ன வெங்காயம் - 5,
இஞ்சி - 1/4 இன்ச் துண்டு,
பூண்டு - 1 பல்,
பச்சை மிளகாய் - 1,
நறுக்கிய கொத்த மல்லித் தழை - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலா - 1/4 டீஸ்பூன்,
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
தண்ணீர் தேவை யென்றால் உபயோகிக்கவும்,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
மேலே தடவ வெண்ணெய் - தேவைக்கு.
செய்முறை : .
வெந்தயக் கீரை, உப்பு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஊற விடவும். ஊறிய வெந்தயக் கீரையை வடித்து, கொத்த மல்லித் தழையுடன் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
இக்கலவையுடன் கோதுமை மாவு, மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து சப்பாத்தி மாவாக பிசைந்து வைக்கவும்.
மாவு தூவி வட்ட சப்பாத்தியாக பரத்தி, சூடான சப்பாத்திக் கல்லில் எண்ணெய் விடாமல் இரண்டு பாகமும் வேக விட்டு எடுக்கவும். சூடான சப்பாத்தியின் மேல் வெண்ணெயை தடவி, காய்கறி குழம்புடன் பரிமாறவும்.